பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் காலம் 119 (6) மூவர் பாடல்களில் மலங்கள் மூன்று என்று சொல்லவில்லை. ஆணவமலம் என்பது காணப்படவில்லை. மாயை, கர்மம் என்ற இரண்டையே மலம் என அக்காலத்தார் கொண்டனர். ஆகமம் பரவிய பிறகு ஆணவமலத்தைக் கூட்டி மலம் மூன்றெனப்பட்டது. மணிவாசகர், “மும்மலம் அறுக்கும்" "உள்ள மலம் மூன்றும்" "மும்மலப் பழவினை" "மும்மை மலம் அறிவித்து" என்று கூறியுள்ளது காண்க. - (7) வினை ஒப்பு என்பது ஆகம நூல்களில் கூறப்படுவது. இது மூவர் பாடல்களில் காணப்படவில்லை. திருவாசகத்தில் என்வினை ஒத்தபின் என்று கூறப்பட்டுள்ளதைக் காண்க. (8) தேவார ஆசிரியர் மூவரும் சிவபிராமன் தம்மைச் சிவமாக்கியதாய்க் கூறவில்லை. சிவபெருமான் எப்பொழுதும் இடையறாது அவர்தம் உள்ளத்தில் நிறைந்து இருந்ததனால், "சித்தம் சிவமாக்கி" என்றனர். தாம் சிவத்தோடு ஒன்றப் போவதாய் அம்மூவரும் சொல்லவில்லை. இறைவன் திருவடிகளில் தம்மைச் சேர்க்கும்படியே வேண்டினர். அம்மூவருக்குப் பின்னே ஏகாத்தும வாடை வீசியது. சைவர்களும் சிவத்தோடு ஐக்கியமாவதை ஒருவகையில் ஒப்புக் கொண்டனர். மணிவாசகர், 'சிவமாக்கி எனையாண்ட” "பேதமில்லதோர் கற்பளித்த" "தந்ததென் றன்னைக் கொண்டதுன் றன்னை "தன்னைத் தந்த வென்னா ரமுதை" எனவும் கூறுவன இங்குக் கவனிக்கத் தக்கவை. மேற் சொல்லியவற்றால் தேவார காலத்திற்குப் பின்னர் ஆகமம் சிறிது பரவிய காலத்து மணிவாசகர் இருந்தாரெனக் கொள்ளலாம்." (9) "தாழிசை துறை விருத்தம் என்னும் இனங்களைச் சங்க காலத்துச் சான்றோர் கொள்ளவில்லை. மூவர் பாடல்களில் விருத்தங்கள் காணப்படுகின்றன. திருவாசகம், திருக்கோவையார் இவற்றில் விருத்தம், துறை இரண்டும் காணப்படுகின்றன. காலம் செல்லச் செல்லப் பாவினங்கள் பெருகுவதை அறியலாம்." (10) "தேவாரம் பாடிய காலத்துப் பாட்டியலில் சொல்லப்படும் பிரபந்த பேதங்கள் சிலவே. மணிவாசகர் கோவை இயற்றியவர். அவர் பாடிய பாவினங்களின் வகைகளும் கவனிக்கத் தக்கன. அவை திருச்சதகம், திருவெம்பாவை, திரு அம்மானை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/128&oldid=793157" இலிருந்து மீள்விக்கப்பட்டது