பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் காலம் 121 என்று பல தலங்களில் கோயில்கொண்டுள்ள சிலபெருமானைக் குறித்துள்ளார். இப்பல இடங்கள் கவைத்தலை, குவைப்பதி, மலைநாடு, அரிகேசரி, திருக்கழுக்குன்றம், திருப்பூவணம் என்பன. இவ்விடங்களில் உள்ள கோவில்களில் உள்ள சிவபெருமானை விளித்துப் போற்றி, போற்றி, போற்றி என்று மணிவாசகர் பாடியுள்ளார். இவ்விடப் பெயர்களுள் அரிகேசரி என்பது எது? அஃது எங்குள்ளது? மணிவாசகர் காலத்தில் அரிகேசரி என்பது அரிகேசரி நல்லூர் என்ற ஊரின் பெயராகும். இந்நீண்ட முழுப் பெயர் நாளடைவில் பேச்சு வழக்கில் குறைந்து அரிகேசரி என வழங்கலாயிற்று. இவ்வூர் பிற்காலத்தில் சின்னமனூர் என வழங்குகிறது. இது மதுரை மாவட்டத்துப் பெரிய குளம் வட்டத்தைச் சேர்ந்தது. இவ்வுண்மையைக் கீழ்வரும் கல்வெட்டு உணர்த்தும் : "பாண்டி மண்டலத்து அளநாட்டுப் பிரம்ம தேயமான அரிகேசரி நல்லூர் ராஜசிம்மேசுவரம் உடைய நாயனார்." கி.பி. 670 முதல் 710 வரையில் பாண்டிய நாட்டை அரிகேசரி மாறவர்மன் என்ற பாண்டியன் ஆண்டு வந்தான். அவன் பெயரால் அரிகேசரி. நல்லூர் ஏற்பட்டிருத்தல் வேண்டும். பூதப்பாண்டிய நல்லூர், வீர பாண்டிய நல்லூர், கங்கைகொண்ட சோழபுரம், ஜயங்கொண்ட சோழபுரம், வீரசோழ நல்லூர், விக்கிரம பாண்டிய நல்லூர், சோழமாதேவி நல்லூர், சேரமாதேவிச் சதுர்வேதிமங்கலம், முடிகொண்ட சோழபுரம், உய்யக்கொண்டான் திருமலை என்ற நீளமான ஊர்ப்பெயர்கள் முறையே பூதபாண்டி, வீரபாண்டி, கங்கை கொண்டான், ஜயங்கொண்டம், வீரசோழன், விக்கிரபாண்டி, சோழமாதேவி, சேரமாதேவி, முடிகொண்டான், உய்யக்கொண்டான் எனக் குறைந்து இன்று வழங்குகின்றன. இவைபோலவே அரிகேசரி.நல்லூர் நாளடைவில் அரிகேசரி என வழங்கலாயிற்று. இவ்வழக்கு மணிவாசகர் காலத்தில் இருந்தமையாற்றான் அவர் 'அரிகேசரி நல்லூராய் என்று அழைப்பதற்குப் பதிலாக அரிகேசரியாய் என அழைத்தனர். "கல்ையார் அரிகேசரியாய்” என்ற தொடருக்குக் கலைகள் பொருந்திய அரிகேசரி நல்லூரிலுள்ள பெருமானே என்பது பொருள். அரிகேசரி.நல்லூர் வேதங்களில் வல்ல பிராமணர்க்குத் தானமாக விடப்பட்டது என்று கல்வெட்டுக் கூறுகிறது. எனவே, பல கலைகளிலும் வல்ல பிராமணர் வாழ்ந்த அரிகேசரி.நல்லூரைக் 'கலையார் அரிகேசரி என அழைத்தது பொருத்தமன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/130&oldid=793164" இலிருந்து மீள்விக்கப்பட்டது