பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கால ஆராய்ச்சி திருவிளையாடற் புராணங்கள் இரண்டும், திருவிடைமருதூர்ப் புராணமும் வரகுண பாண்டியன் வரலாற்றைக் குறிக்கின்றன. அவ்வரலாற்றுச் செய்திகள் இவ்விரண்டாம் வரகுணனைப் பற்றிய கல்வெட்டுச் செய்திகளோடும் பல இடங்களில் மணிவாசகர் குறிக்கும் செய்திகளோடும் ஒன்றுபடல் காணத்தக்கது. வரகுணன் வேட்டையாடித் திரும்பும்பொழுது அவனது குதிரையின் கால்களில் சிக்குண்டு பிராமணன் ஒருவன் இறந்தான். அதனால் பிரம்மஹத்திதோஷம் அவனைப் பற்றிக்கொண்டது. பாண்டியன் அதனைத் தொலைக்க மதுரைச் சோமசுந்தரக் கடவுளை வேண்டினான். அவ்வமயம் சோழ மன்னன் பாண்டியன்மேல் படையெடுத்தான். பாண்டியன் தனக்கு வெற்றி தருமாறு இறைவனை வேண்டினான். சோழன் படையை விரட்டிக் கொண்டு திருவிடைமருதூர் வரையில் சென்றால் வெற்றி கிடைக்குமென்று திருவருள் உணர்த்தியது. சிவபெருமான் தன்னையே சிவலிங்க வடிவில் வழிபட்ட இடம் திருவிடைமருதூர். ஆதலால், அஃது ஏனைய சிவத்தலங்களைவிடச் சிறந்ததாகும்; அவ்விடத்தில் அவனது பிரம்மஹத்திதோஷம் நீங்கிவிடுமென்றும் திருவருள் உணர்த்தியது. வரகுணன் திருவருள் உணர்த்தியபடி சோழன் படையைத் துரத்திக் கொண்டு சோழநாட்டில் நுழைந்தான்; திருவிடைமருதூரில் தங்கி இறைவனைத் தொழுதான். அவனைப் பற்றியிருந்த பிரம்மஹத்திதோஷம் அத்தலத்தில் நீங்கிவிட்டது. "அவனிடம் தோல்வியுற்ற சோழவேந்தன் அவனுடன் உறவு கொள்ள விரும்பித் தன் மகளை அவனுக்கு மணம் செய்வித்தான். பாண்டியன் சிறந்த சிவபக்தனாதலால் அன்று இரவே மணமகளுடன் கோவிலுக்குச் சென்று ുഖങ്ങബT ஏற்றுக்கொள்ளும்படி சிவபெருமானை வேண்டினான். இறைவன் தனது லிங்க வடிவில் அப்பெண்ணை ஏற்றுக் கொண்டார். வளையல் அணிந்த அவளது வலக்கை மட்டும் லிங்கத்திற்கு வெளியே காணப்பட்டது. அடுத்த நாள் அடியவர் பலரும் காண அவ்வலக்கையும் லிங்கத்தினுள் மறைந்துவிட்டது” என்று திருவிடைமருதூர்ப் புராணம் செப்புகின்றது. இவ்வாறு இப்பாண்டியன் சிவபெருமானுக்கு மனைவியைக் கொடுத்ததை, விரும்பின கொடுக்கை ப்ரம்பரற் கென்று புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய அன்பின் வரகுண தேவரும் என்று கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தடிகள் தமது திருவிடைமருதூர் மும்மணிக்கோவையில் வியந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/133&oldid=793170" இலிருந்து மீள்விக்கப்பட்டது