பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் காலம் 125 பாராட்டியுள்ளார் பட்டினத்தடிகளுக்குப் பின்னர் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி இதே செயலை, நேசமார் தேவிதன்னை நின்னுடை யடிமைக் காமென் றாசைகூர்ந் தளித்தவ் வேந்தன் என்று பாராட்டியுள்ளார். பின்பு பாண்டியன் மதுரைக்குத் திரும்பினான் எனறும, இறைவன் திருவருளால் சிவலோகக் காட்சி அவனுக்குக் கிடைத்தது என்றும் இரண்டு திருவிளையாடல்களும் இயம்புகின்றன. சோழன் படையை வரகுணன் வென்றான் என்று புராணங்கள் கூறுதலை, வரகுணன் இடவையில் போரிட்டான் (சோழநாட்டு ஊர்), வேம்பில் அழித்தான், திருப்புறம்பியத்தில் போரிட்டான் என வரும் கல்வெட்டுச் செய்திகள் உறுதிப்படுத்தலைக் காணலாம். திருவிடைமருதூர்ச் சிவன் வரகுணனிடம் காட்டிய பேரருளைக் கண்டு உள்ளம் உருகியதனாற் போலும் மணிவாசகர், இடைமரு ததனில் ஈண்ட இருந்து படிமப் பாதம் வைத்தவப் பரிசும் என்று கூறியுள்ளார். மேலும், அப்பெரியார் திருவாசகத்தில் பல இடங்களில் திருவிடைமருதூரையும் அதில் கோவில் கொண்டுள்ள சிவபெருமானையும் பலபடப் பாடியுள்ளார்; மேலும் வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய திறத்தினை, நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல் பரகதி பாண்டியர்க் கருளினை போற்றி என்று பாராட்டியுள்ளார். அப் பெரியாரே பிறிதோரிடத்தில் பாண்டியன் மனைவியைச் சிவபெருமான் ஆட்கொண்ட திறத்தைக் குறித்துள்ளார்." - புராணங்கள் வரகுணனோடு தொடர்புபடுத்தும் திருவிடைமருதூரின் சுருங்கிய பெயரே இடைவை என்பது. வரகுணன் சோழனோடு போரிட்டதாகக் கூறப்படும் இடைவை என்பது காவிரிக்கரையில் கும்பகோணம் தாலுகாவிலேயே இருப்பது. அவன் அழித்ததாகக் கூறப்படும் வேம்பில் என்பதும் திருவிடைமருதூரும் அதே தாலுகாவிலுள்ளன. இடவைப் போரும் வேம்பில் போரும் திருப்புறம்பியப் போருக்குக் காரணமாக இருந்தன என்னல் தவறாகாது. இடவை அப்பர் தேவாரத்தில் வைப்புத் தலமாகக் காண்கிறது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/134&oldid=793172" இலிருந்து மீள்விக்கப்பட்டது