பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கால ஆராய்ச்சி மூவர் தேவார்த்திலும், சேரமான் பெருமாள் பாடிய பொன்வண்ணத்து அந்தாதியிலும் தில்லைக் கோவிலுள் திருமால் கோவில் இருந்தமைக்குரிய சான்றுகள் இல்லை. ஆழ்வார் பாடல்களுள் இ.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் பாக்களிலேயே இக்குறிப்புக் காணப்படுகின்றது. இது பற்றிய திருமங்கையாழ்வார் பாசுரம் இங்குக் கவனிக்கத் தகும்: பைம்பொன்னு முத்தும் மணியும் கொணர்ந்து படைமன்ன வன்பல் லவர்கோன் பணிந்த செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச்சித்திர கூடம் சென்று சேர்மின்களே. திருமங்கையாழ்வார் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்தவர். பல்லவ மன்னர் புதிய கோவில்களைக் கட்டினர்; பழைய கோவில்களைப் புதுப்பித்தனர். அந்நிலையில் மேற்கூறப்பெற்ற செய்யுள் பல்லவன் தில்லையில் புதிதாய்த் திருமால் கோவிலை அமைத்தான் என்பதையே குறிக்கின்றது எனலாம். புதிய கோவிலை அமைக்கும் அரசன் முதலியோர் கருவறையின் அடியில் விலையுயர்ந்த கற்களையும், முத்துக்களையும், பொன்னையும் தக்க மந்திரங்களைச் சொல்லிப் புதைக்க வேண்டும்; அவற்றின்மீது மூர்த்தத்தை எழுந்தருளுவித்தல் வேண்டும் என்று வைணவ வைகாநச ஆகமம் கூறுகின்றது. அத்திரி சம்ஹிதையில் 34ஆம் அத்தியாயமாக உள்ள ரத்ன நியாச விதி என்னும் பகுதியும் இதனை வற்புறுத்தும். இக்குறிப்புக்களைக் கொண்டு, மேற்கூறப் பெற்ற செய்யுளின் முதல் இரண்டு அடிகளையும் கவனிக்கவும். பொன், முத்து, மணிகள் இவற்றைப் பல்லவன் கொணர்ந்து திருமாலை வழிபட்டான் என்று செய்யுளில் கூறப்படுதல், பல்லவன் புதிதாகவே கோவில் கட்டிக் கருவறையில் பெருமாளை எழுந்தருளுவித்துப் பூசித்ததையே குறிக்கின்றது என்பது தெளிவாதல் காண்க. இங்ங்னம் செய்த பல்லவன் திருமங்க்ையாழ்வார் காலத்தவனான இரண்டாம் நந்திவர்மன் எனப்பட்ட பரமேசுவரனே யாவன். இப்பல்லவனே காஞ்சியில் பரமேசுவர விண்ணகரத்தையும், கும்பகோணத்திற்கு அருகில் நந்திபுர விண்ணகரத்தையும், புதியனவாக அமைத்தவன். திருமழிசையாழ்வார் திருமங்கையாழ்வாருக்கு முற்பட்டவர். அவர் சிறிது காலம் தில்லையில் தங்கியிருந்ததாகக் குரு பரம்பரை என்னும் வைணவ நூல் கூறுகிறது. அவர் காலத்தில் தில்லைக் கோவிலுள் பெருமாள் கோவில் இருந்திருப்பின், அவர் பாடாதிரார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/135&oldid=793175" இலிருந்து மீள்விக்கப்பட்டது