பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் காலம் 133 என்றெல்லாம் பாராட்டினார் என்று கூறுதல் சிறிதும் பொருந்தாமை உணரப்படும். எனவே, அவரால் பாராட்டப்பெறும் தகுதியுடையவன் முதல் வரகுணனே என்று சொல்வது முற்றிலும் பொருத்தமாகும். ஆகவே, மணிவாசகர் காலம் முதல் வரகுணன் காலம் (கி.பி.800-830) என்று சொல்லுதல் பொருந்தும். ஏகான்ம வாதம் என்னும் மாயவாதத்தைத் தென்னாடெங்கும் தமது வாக்குவன்மையால் பரவச்செய்த பெருமை ஆதி சங்கரர்க்கே உரியது. அப்பெரியார் தமது நான்கு சீடர்களைக் கொண்டு காஞ்சி, பூரி, சிருங்கேரி, துவாரகை என்னும் நான்கு இடங்களில் அத்துவைத மடங்களைத் தோற்றுவித்துத் தமது பிரசாரம் இந்தியா முழுமையும் நடைபெற ஏற்பாடு செய்தார். அவரது காலம் ஏறத்தாழக் கி.பி. 788-820 என்று அறிஞர் கூறுவர்.” அவரது சமயப் பிரசாரம் நாடு முழுமையும் பெருங்காற்றுப் போலப் பரவிய நிலைமையை மணிவாசகர், மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மாருதம் சுழித்துஅடித்து ஆர்த்தும் என்று குறித்துள்ளார். இவ்வடிகள் மாயவாதப் பிரசாரம் நாடெங்கும் செய்யப் பெற்ற நிலையினை நன்கு விளக்குகின்றன அல்லவா? இத்தகைய வன்மை வாய்ந்த பிரசாரம் சங்கரர்க்குப் பிற்பட்ட காலங்களில் நாடெங்கும் நடைபெற்றதென்று கூறுதற்குத் தக்க சான்றின்மையால், சங்கரர் காலத்தில் நடைபெற்ற வன்மை வாய்ந்த பிரசாரத்தையே இவ்வடிகள் குறிக்கின்றன என்று கோடல் தவறாகாது. எங்ங்னங் கொள்ளினும், மணிவாசகர் சங்கரர் காலத்தவர் அல்லது சங்கரர்க்குப் பிற்பட்டவர் என்பது தெளிவு. இப்புதிய சான்றாலும் மாணிக்கவாசகர் கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் என்னும் கருத்து வன்மை பெறுதல் காண்க. குறிப்புகள் 1. தமிழ்ப் பெருமக்கள் வரலாறு பக். 83-84. 2. The Age of Manikkavachagar - Journal of Sri Venkateswara Oriental institute. Vol. 4, Part I, pp, 176- 182. 3. பெரிய புராணம், ஐயடிகள் புராணம், செய்யுள் 2.6 4. Mysore Annual Archaeological Report, 1925, pp.9-12 5. செய்யுள் 17, 5. 5, 85, 10, சமாசப் பதிப்பு. 7. செ. 6. (சிராப்பள்ளிப் பதிகம்). 8. A.R.E. 1937-38, P. 78.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/142&oldid=793192" இலிருந்து மீள்விக்கப்பட்டது