பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கால ஆராய்ச்சி இப்பெருவீரன் தோல்வியையே அறியாதவன்; சிவபக்தியிலும் சிறந்தவன். இவன் அம்பாசமுத்திரம் கோவிலுக்கும் திருச்சிராப்பள்ளி கோவிலுக்கும் நிவந்தங்கள் விட்டிருப்பதிலிருந்து இவன் பரம சிவபத்தன் என்பதை நன்கறியலாம். இவன் மகனான பூரீமாறன் காலத்தில் வரகுணன் வென்ற தொண்டை நாட்டின் வட பகுதியும் சோழ நாடும் முறையே பல்லவர் கைக்கும் சோழர் கைக்கும் மாறிவிட்டன. குடமூக்கு, அரிசில் கரை, தெள்ளாறு இவற்றில் நடைபெற்ற போர்களில் பல்லவரும் சோழரும் வெற்றி பெற்றனர்; எனவே, இவனுக்குப் பின்பு வந்த இரண்டாம் வரகுணன் தனக்கு உரிமையாக இருந்த பாண்டிய நாட்டை மட்டுமே ஆளவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவன் காலம் கி.பி. 862-880. அவனது ஆட்சி முடிவிற்றான் அவனுக்குப் படுதோல்வி அளித்த திருப்புறம்பியப் போர் நடைபெற்றது. திருப்புறம்பியத்திலும் இடவை என்னும் இடத்திலும் போர்கள் நடந்தன. இவை இரண்டும் கும்பகோணம் தாலுகாவிலேயே உள்ள இடங்கள். இப்போர்கள் கி.பி. 880இல் நடைபெற்றன என்று அறிஞர் கூறுகின்றனர்." எனவே, இவன் தனது 18 ஆண்டு ஆட்சிக் காலத்தில் இடவை, திருப்புறம்பியம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே சண்டை செய்தவன், இறுதியிற்றோற்று அழிந்தவன் என்பனவே நமக்குக் கிடைக்கும் செய்திகள். எனவே, இவன் தில்லையை அடைந்து கூத்தப் பெருமானை வழிபட்டான் என்பதற்குச் சான்றில்லை. மாணிக்கவாசகர் தமது திருக்கோவையாரில் பாராட்டிய வரகுணன் “மால் அரியேறு அன்னவன் தெம்முனைமேற் சென்றவன், அவனது தேர் போரில் பின்னடையாதது. அவன் இருங்களியானை வரகுணன்', "வரகுணனாந் தென்னவன் ஏத்தும் சிற்றம்பலத்தான்", “சிற்றம்பலம் புகழும் வரகுணன்' என்னும் தொடர்களால் மாணிக்கவாசகர், தம் காலத்து வாழ்ந்த வரகுணன், சிற்றம்பலப் பெருமானிடம் கொண்ட ஈடுபாட்டினை நன்கு தெரிவிக்கின்றார். இங்ங்னம் போர்த்திறனும், வீரமும், சைவப்பற்றும் ஒருங்கே கொண்ட பாண்டியன், தில்லையையும் அதற்கப்பாலுள்ள தொண்டை நாட்டையும் வென்று அடிப்படுத்திய பெருவீரனான வரகுணனே ஆவன் என்று கொள்ளுதல் ஏற்புடையது. இம்மூன்று தகுதிகளும் இரண்டாம் வரகுணனுக்கு அமையவில்லை என்பது அவன் வரலாற்றால் துணியப்படும். முற்றும் துறந்த மாணிக்கவாசகர், எத்தகைய ப்ோரிலும் வெற்றிபெறாத இரண்டாம் வரகுணனை, “மால் அரியேறு அன்னவன்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/141&oldid=793190" இலிருந்து மீள்விக்கப்பட்டது