உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் காலம் 131 பெற்றுள்ளார் என்று ஊகிக்க இடமுண்டு. சுந்தரர் மூன்றாம் நந்திவர்மன் காலத்தவர் (கி.பி. 840-865) என்பது பலர் கருத்து. மாணிக்கவாசகர் காலத்து வரகுணன் மாணிக்கவாசகர், முதலாம் வரகுணன் (கி.பி. 792- 835) காலத்தவர் என்றும்’ இரண்டாம் வரகுணன் காலத்தவர் கி.பி. 862-880) என்றும்" அறிஞர் கூறுவர். பொய்யடிமை இல்லாத புலவர் என்பது மணிவாசகரைக் குறித்ததே எனக் கொள்ளின், மணிவாசகர் சுந்தரர்க்கு (கி.பி. 840-865) முற்பட்டவராதல் தெளிவு. இங்ங்னம் கொள்ளின், அவர் முதல் வரகுணன் காலத்தவராகக் கோடலே பொருந்தும். இக்கருத்தே தென்னிந்திய வரலாற்றறிஞராய T.V.S. பண்டாரத்தார் கருத்தாதலும் காண்க. அறிஞர் சிலர் கருதுவதுபோல, மணிவாசகரை இரண்டாம் வரகுணன் காலத்தவராகக் (கி.பி. 862-880) கொள்ளின், அவரைச் சுந்தரர்க்குப் பிற்பட்டவராகக் கொள்ளுதல் வேண்டும். அங்ங்னம் கொள்ளின், அவரால் குறிக்கப்பட்ட பொய்யடிமை இல்லாத புலவர் என்பது மணிவாசகரைக் குறியாது. ஆயின், K.G. சேஷ ஐயர் கூறுதல்போல, பொய்யடிமை இல்லாத புலவர் என்பது சங்கப் புலவரைக் குறியாமல், மாணிக்கவாசகரையே குறிப்பதாகக் கொள்வதே பொருத்தமாகக் காணப்படுகிறது. எனவே, மூன்றாம் நந்திவர்மன் காலத்தவராகக் (கி.பி. 840-865) கருதப்படும் சுந்தரரால் பாடப் பெற்ற மணிவாசகர் முதல் வரகுணன் காலத்தில் (கி.பி. 792-835) வாழ்ந்தவராகக் கோடலே ஏற்புடையது. முதல் வரகுணன் சோழநாட்டினின்றும் தொண்டை நாட்டின் தென் பகுதியையும் கைக்கொண்டவன். அவனுடைய கல்வெட்டுக்கள் தஞ்சை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் பரவி இருந்தன. கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு முடிய வாழ்ந்த பாண்டிய மன்னருள் பெருவீரனாக விளங்கியவன் இவன் ஒருவனே என்று கூறுதல் தவறாகாது. இவன் தொண்டை நாட்டில் பெண்ணையாற்றங் கரையிலுள்ள அரசூரில் தங்கியிருந்தான் என்பதை இவனது அம்பாசமுத்திரக் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது. எனவே, இவன் தான் வென்ற நாட்டில் இருந்த தில்லையை வழிபட்டிருத்தல் இயல்பேயாகும். இந்த வாய்ப்பு இரண்டாம் வரகுணனுக்கு இல்லை என்பது இங்கு அறியத்தகும். . இதனால் சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூரும் தில்லையும் இவன் ஆட்சிக்கு உட்பட்டன என்பது தெளிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/140&oldid=793188" இலிருந்து மீள்விக்கப்பட்டது