பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கால ஆராய்ச்சி இன்ன பிற காரணங்களால் மூன்றாம் குலோத்துங்கன் சேக்கிழார் காலத்தவன் ஆகான் என்பது அறியப்படும். அநபாயன் இரண்டாம் குலோத்துங்கனே சேக்கிழார் புராண ஆசிரியர், சேக்கிழார் காலத்து அரசனை அபயன்' எனவும், அநபாயன்” எனவும் குறித்துள்ளார் என்பன முன்பே கூறினோம் அல்லவா? சேக்கிழார் பத்து இடங்களில் தம் காலத்து அரசனைக் குறித்துள்ளார்; அப்பத்து இடங்களிலும் அநபாயன் என்பதையே சிறப்பாகக் குறிக்கின்றார்; இரண்டு இடங்களில் "அபயன் என்பதைக் குறித்துள்ளார். இனி, இம்மன்னனைப் பற்றிப் பெரிய புராணம் கூறுவனவும், கூத்தர் பாடிய உலா, பிள்ளைத்தமிழ், தக்கயாகப் பரணி ஆகிய மூன்றும் கூறுவனவும் முறையே காண்போம்: பெரிய புராணம் கூறுவன உலாவும் பிள்ளைத் தமிழும் தக்கயாகப் பரணியும் கூறுவன: 1. பேரம்பலம் பொன் வேய்ந்தமை' 2. சிறந்த சிவபக்தன்' செங்கோல் அரசன் 4. |தில்லைத் திரு எல்லை 5. |தில்லைநகர் மணிவீதி அணி விளக்கும் சென்னிநீடு அநபாயன் 6. |அம்புயமலராள் மார்பன்' 7. சிறந்த கொடையாளி -- - • ... 4 பொன்னின் மயமாக்கினான் பேரம்பலம் பொன்வேய்ந்தமை' சிறந்த சிவபக்தன்' பட்டம் பெற்றவுடன் பகை வேந்தரை விடுதலை செய்தான்; செங்கோல் அரசன் சிற்றம்பலம், பல மண்ட பம், அம்மன் கோவில், எழுநிலைக் கோபுரம், திருச்சுற்று மாளிகை, தெரு இவற்றைப் பொன் மயம் ஆக்கினான்' நான்கு திருவீதிகளையும் அமராவதியில் உள்ள பெருவீதிகள் நாணப் பெருக்கினான் இலக்குமியை மார்பில் தரித்தவன்" மறையவர்க்குத் தானம் செய்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/153&oldid=793219" இலிருந்து மீள்விக்கப்பட்டது