உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் காலம் 145 பெரிய புராணம் கூறுவன உலாவும் பிள்ளைத் தமிழும் தக்கயாகப் பரணியும் கூறுவன: இவனைக் குறிக்கும் இவனைக் குறிக்கும் சொற்கள்: சொற்கள்: (1) |அநபாயன் -10 இடங்களில் அநபாயன்-3 இடங்களில் வருகின்றன’ வருகின்றன’ (2) |அபயன் -2 இடங்களில்’ அபயன்-2 இடங்களில் வருகின்றன (3) |சென்னி-3 இடங்களில்" ೧6: -2 )-ಏಹಗಿನು வருகின்றன (4) செம்பியன்-1 இடத்தில்" (5) குலோத்துங்கன்-1 இடத்தில்" குலோத்துங்கன் 4 இடங்களில் வருகின்றன" இங்ங்னம் சேக்கிழாரும் ஒட்டக்கூத்தரும் குறிப்பிட்ட கருத்துக்கள் ஒன்றுபடுதலைக் காணின், சேக்கிழார் குறித்த அநபாயன் குலோத்துங்கனே என்பது ஐயமற விளங்குகிறதன்றோ? தண்டியலங்கார மேற்கோள் பாக்களில் எட்டுப் பாடல்கள் அநபாயனைப் பற்றியே வருகின்றன." அவை அவனுடைய வள்ளற்றன்மை, செங்கோன்மை, பேரரசுத்தன்மை ஆகிய மூன்றையும் பெரிய புராணத்தைப் போலவும் உலா, பிள்ளைத்தமிழ், பரணி போலவும் விளக்கமாகக் கூறுகின்றன. அப்ப்ாடல்களுள் இறுதிப் பாடல் அநபாயனை வாழ்த்துவதாக முடிவதால், தண்டியலங்கார மூலமும் உரையுமோ அல்லது உரை மட்டுமோ இவ்விரண்டாம் குலோத்துங்கன் காலத்தது எனக் கூறலாம். இங்குப் பெரிய புராணம் குறிக்கும் பத்து இடங்களிலும் சிறப்புச் சொல்லாக அநபாயன் என்பதே ஆளப்பட்டிருத்தலும், தண்டியலங்காரம் குறிக்கும் மேற்கோட் செய்யுட்கள் எட்டிலும் அநபாயன் என்ற சொல் ஒன்றே ஆளப் பட்டிருத்தலும் காணச் சேக்கிழார் காலத்தரசன் அநபாயன் என்ற பெயர் ஒன்றையே தனது சிறப்புப் பெயராகக் கொண்டவன் என்பது நன்கு தெரிகின்றது. இங்ங்னம் கொண்டவன் கூத்தரால் புகழ்ப் பெற்ற இரண்டாங் குலோத்துங்கனே என்பது மேற்காட்டிய ஒற்றுமையால் நன்கு விளக்கமாதல் காண்க. இனி, இவ்விரு புலவரும் குறித்த செய்திகள் அனைத்திற்கும் இக்குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் சான்று பகர்ந்து நிற்கும் அருமைப்பாட்டைக் கீழே காண்க:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/154&oldid=793221" இலிருந்து மீள்விக்கப்பட்டது