பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் காலம் 157 1, 2, 3 இராவ்சாகிப் மு. இராகவையங்கார் கொண்ட முடிபை ஏற்றுக் குறிக்கப்பெற்றன. — Vide his Sasana Tamil Kavi Charitram pp. 71-77. மற்றவை பேராசிரியர் க. அ. நீலகண்ட சாத்திரியார் கொண்ட αρις.1%tuiq. (5%£ij@Ljpsst. — Vide his 'Cholas Vol. II, Part II. சேக்கிழார் மரபினர் இக்கல்வெட்டுச் செய்திகளால் அறியப்படுவன: 1. சேக்கிழார் குடியினர் தொண்டை மண்டலத்து மணவிற்கோட்டம், மேலூர்க்கோட்டம், புலியூர்க் கோட்டங்களில் வாழ்ந்து வந்தனர். - 2. அக்குடியினர் சோழ முத்தரையன்', 'உத்தமசோழப் பல்லவராயன், களப்பாளராயன், ‘கரிகாலசோழப் பல்லவராயன், 'முனையதரையன் என்ற பட்டங்கள் பெற்றுச் சோழர் அரசியலில் சிறந்த பங்கு கொண்டிருந்தனர். 3. அங்ங்னம் அரசியலிற் பங்கு கொண்டவருள் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினரே பலராவர். 4. இம்மரபினர், திருத்தொண்டர் புராண வரலாறுடையார் குறித்தபடி, சோழராட்சி முடியுமளவும் அதற்குப் பிறகும் அரசியற் பதவிகள் தாங்கியிருந்தனர். 5. இம்மரபினர் சைவப் பற்றுடையவராய்ப் பல தளிகட்குத் தானம் செய்த பெருமக்களாவர். இவருட் பெரியபுராணம் பாடியவர் யாவர்? மேற்காட்டிய பட்டியலில் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினர் இரண்டாம் குலோத்துங்கன் கால முதற்றான் சோழர் அரசியலில் சிறப்புப் பெறலாயினர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரண்டாம் இராசாதிராசனது 19 ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிற் காணப்பெறும் சேக்கிழார் பாலறாவாயரும் மூன்றாம் குலோத்துங்கனது 2ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டிற் காணப்பெறும் சேக்கிழார் பாலறா வாயரும், ஒருவரே எனக் கோடல் தவறாகாது. இரண்டாம் இராசராசனது 17ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிற் காணப்பெறும் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனான உத்தம சோழப் பல்லவராயன்’ என்பவர் மேற்சொன்ன பாலறாவாயர் தமையனாரும் பெரிய புராணம் பாடியவருமாகிய சேக்கிழாராக இருக்கலாம் என்று கோடலும் தவறாகாது. என்னை? சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவரே என்பது மேலே பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/160&oldid=793237" இலிருந்து மீள்விக்கப்பட்டது