பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கால ஆராய்ச்சி கோவிலில் உள்ள 4 கல்வெட்டுக்களைக் காணின் அவற்றில் பழமையானவை இரண்டாம் குலோத்துங்கன் காலத்தனவேயாகும் என்பதை அறியலாம். அக்கோவிலில் சேக்கிழார்க்குத் தனிக் கோவில் இருக்கின்றது; சேக்கிழார் விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. அக்கோவிலுக்குச் சிறப்பாகச் சேக்கிழார் மரபினரே தானங்கள் செய்தனர் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன." இவை அனைத்தையும் நோக்கச் சேக்கிழார், சோணாட்டுத் திருநாகேச்சரத்தை நினைவிற் கொண்டு தம் ஊரில் இக்கோவிலைக் கட்டியிருக்கலாம் என்று கோடல் பொருத்தமே ஆகும். சேக்கிழார் மரபினர் சேக்கிழார் புராண ஆசிரியர், சேக்கிழார் கால முதல் இன்றுவரை அம்மரபினர் அரசர்பால் சிறப்புற்று வருகின்றனர் என்று கூறியுள்ளார்." அவர் கூற்று மெய் என்பதை நாம் முன்புகாட்டிய சேக்கிழார் பெயர்ப்பட்டியல் உறுதிப்படுத்தலைக் காணலாம். (1) இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினரைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் சேக்கிழார் காலத்தவனான இரண்டாம் குலோத்துங்கன் கால முதலே காணக்கிடைக்கின்றன. (2) அவருக்குப் பின்னும் அம்மரபினர் சோழப் பேரரசில் சிறப்புற்றிருந்தனர் என்பது மேற்சொன்ன பட்டியலைக் கொண்டே பாங்குற உணரலாம். முடிவுரை - . இதுகாறும் நடத்திய ஆராய்ச்சியாற் போந்த செய்திகளாவன: (1) சேக்கிழார் தொண்டைமண்டலம் - புலியூர்க் கோட்டம் - குன்றத்தூர் வளநாட்டுக் குன்றத்தூரினர்; வேளாளர்; சேக்கிழார் குடியினர். அவரது இயற்பெயர் இராமதேவன் என்பதாகலாம். அவர் தம்பி பாலறாவாயர். (2) சேக்கிழார் காலத்து அரசன் அநபாயன் என்ற சிறப்புப் பெயர்கொண்ட இரண்டாம் குலோத்துங்கன். சேக்கிழார் அவனுடைய முதலமைச்சர் ஆதலால் அவர் 'உத்தம சோழப் பல்லவராயர் என்ற பட்டம் பெற்றவர் இளவரசனான இரண்டாம் இராசராசனிடம் நெருங்கிப் பழகிய வராகலாம். (3) சேக்கிழார் சோழநாட்டுத் திருநாகேச்சரத்தில் மிகுந்த பத்தியுடையவர். ஆதலால் அதற்கு அறிகுறியாக அவர் தமது ஊரில் 'திருநாகேச்சரம் என்ற பெயரால் கோவில் எடுப்பித்திருக்கலாம். (4) சேக்கிழாருடைய சைவ சமயப் பற்றும் நாயன்மார் வரலாற்று அறிவும் சிறந்த தமிழ்ப் புலமையும் கண்ட அநபாயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/163&oldid=793243" இலிருந்து மீள்விக்கப்பட்டது