பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றின் காலம் 9 நூலிற் குறித்த சாலியூரும் சேரவருதலான், இந்நாடு முதலில் தென்னாட்டுப் பாண்டியராலே கொள்ளப்பட்டதாக நன்கு தெளியலாம். இவன் பொன்படு தீவங் கொண்ட சிறப்பையே போற்றி இவன் சயமா கீர்த்தி எனவும், 'நெடியோன் எனவும் புகழ் பெற்றனன்.... இவன் வென்று கொண்ட பிற நாடு மலயம் என இன்று வரை வழங்குதலும் இவனுடைய பொதியப் பொருப்பாகிய 'மலயம் பற்றியதாகும். மதுரை என்பது, கீழ்க்கடலகத்து யவத்தீவத்தை அடுத்து இப்போதுள்ள தீவாகும். இது முன்னர் ஒன்றாக இருந்ததென்ப. இச்சாவகத்தீவுடன் சங்ககாலத்தில் வாணிகம் சிறக்க நடந்தது என்பதை மணிமேகலையால் அறியலாம். சாவகத் தீவில் பலபடியாகப் பகுப்புண்ட பெருநிலப்பெய்ர்கள் இன்றைக்கும் 'பாண்டியன் மதியன் புகார், பாண்டிய வாசம், மலையன்கோ, கந்தளி செம்பூட்சோய் என வழங்குதல் காணலாம். குறிஞ்சி செங்கரை என்பன ஆண்டுள்ள குளங்களின் பெயர்கள். "நெடியோன் எனப்பட்ட பாண்டியன், அக்கரையிலுள்ள ஆழி, தன்பாதத்தை அலம்பும்படி நின்றவன்' என உணர்தலே பொருந்தியதென்க. இக்காரணத்தாலே மூவுலகும் ஈரடியால் அளந்தவனாகிய நெடியோனை ஒப்பநின்றான் என்பது பற்றி, நெடியோன் என்றார். இத்தகைய சிறந்த நெடியோன் வழித்தோன்றலாதல் பற்றியே, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்துபட்ட வியன்ஞாலம் தாளின் தந்து தம்புகழ் நிறீஇ ஒருதா மாகிய வரவோ ரும்பல் எனக் குடபுலவியனாரால் புறப்பாட்டில் (18) ஏத்தெடுக்கப்பெற்றான் என்க." இந்நெடியோன் தொல்காப்பியர் காலத்தவன் என்று மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் ஆராய்ந்து முடிவு கூறியுள்ளனர்." தொல்காப்பியர் காலம் கி.மு. 4 - ஆம் நூற்றாண்டு ஆகும். எனவே, இவன் காலமும் அதுவே எனல் பொருத்தமாகும். மோரியர் படையெடுப்பு (கி.மு. 300 - 272) சந்திர குப்த மோரியனது அமைச்சன் வரைந்த பொருள் நூலில் பாண்டியநாட்டு முத்துக்களும், மெல்லிய ஆடைகளும், சேரநாட்டுப் பொருள்களும் குறிக்கப் பெற்றுள. சந்திரகுப்தன் மகனான பிந்துசாரன் 28 ஆண்டுகள் பேரரசனாக இருந்தான். அவன் தமிழகம் ஒழிந்த தென் இந்தியப்பகுதி முழுமையும் கைப்பற்றி ஆண்டான். அவன் காலத்திற்றான் (கி.மு 300 -272) மோரியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/17&oldid=793258" இலிருந்து மீள்விக்கப்பட்டது