பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கால ஆராய்ச்சி படைவீரர், வடுகர்படை, கோசர்படை என்றவற்றுடன் தமிழகத்தினுள் நுழைந்து, பலவாறு திரிந்து பல இடங்களில் தோல்வியும் வெற்றியும் பெற்று, இறுதியில் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவனால் முற்றிலும் முறியடிக்கப்பட்டுத் திரும்பினர் என்பது புறப்பாட்டுக்களாலும் (175, 378) அகப்பாக்களாலும் (69, 251, 281) அறியப்படும் செய்தியாகும். 4 முதற் கரிகாலன் (கி.மு. 120 கி.மு. 90) இவனைப் பற்றிய புறப்பாட்டுகள் 65, 66 ஆம் எண் பெற்றனவாகும்; அகத்தில் 55, 125, 141, 246, 376 முதலிய எண்ணுடைய பாடல்களாகும். இவன் கரிகால் பெருவளத்தானுக்குப் பாட்டனாகலாம். இவனைப்பற்றிய விரிவான ஆராய்ச்சியை அறிஞர் சிவராசபிள்ளை அவர்கள் நூல் கொண்டு உணர்க." இக்கரிகாலன் பெருஞ்சேரலாதனுடன் வெண்ணிப்பறந்தலையில் பொருதான்; புறப்புண்பட்ட சேரலாதன் நாணி வடக்கிருந்தான். இரண்டாம் கரிகாலன் (கி.பி. 75 -1.15) இவனே சிலப்பதிகாரம் கூறுமாறு, இமயம் சென்று மீண்ட பேரரசன். இவனே தொண்டைநாட்டை வளப்படுத்திச் சோணாட்டைப் பெருக்கிய பெருவீரன். இவன் மரபினர் என்று பிற்காலக் கருநாடக - ஆந்திர அரசர்களும் தாம் விடுத்த செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுக்களிலும் கூறிக்கொன்டனர்” எனின், இவன் பெருமையை என்னென்பது. இவன் காலத்திற் சோழப் பெருநாடு வடபெண்ணையாறு முதல் குமரிமுனை வரை பரவியிருந்ததென்னலாம். இவன் காலத்தில் பூம்புகார் சிறந்த துறைமுகப்பட்டினமாய் விளங்கியது. வங்க நாசிக திஸ்ஸன் (கி.பி. 111 - 114) காலத்தில் சோழ நாட்டை விரிவாக்கிய சோழன் ஒருவன் படையெடுப்பு இலங்கைமீது நடைபெற்றது. அச்சோழன் பன்னிராயிரம் சிங்களவரைச் சிறைசெய்து சோழ நாட்டிற்குக் கொண்டு சென்றான். அந்த அவமானத்தை நீக்கக் கயவாகு வேந்தன் (கி.பி. 114 - 136) சோழநாட்டின் மீது படையெடுத்துப் பன்னிராயிரம் தமிழரைச் சிறைசெய்து இலங்கைக்குக் கொண்டு வந்தான் என்று இலங்கை வரலாறு கூறுகிறது. 27 சங்க காலத்தில் நாட்டை விரிவாக்கியவன் கரிகாலனே என்பது சங்கப் பாடல்களால் தெரிகிறது. இப்பொழுது கடப்பை என்று பெயர் பெற்றுள்ள மாவட்டமும் அதைச் சூழவுள்ள பகுதியும் கரிகாலனால் செம்மைப் படுத்தப்பட்டது போலும். அப்பகுதி கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ரேநாடு எனப்பட்டது. அதனை ஆண்டவர் தம்மைச் சோழர் என்றும், கரிகாலன் மரபினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/18&oldid=793273" இலிருந்து மீள்விக்கப்பட்டது