பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றின் காலம் 13 பாண்டியர் பாரதகாலத்துப் பழமையுடையவர் என்பது கூறாமற் கூறியவாறாகும். 11. தமிழ் வரலாறு, பக். 228, 230, 12. மு. இராகவையங்கார், சேரவேந்தர் செய்யுட்கோவை 1, முன்னுரை பக். 9. 13. இக்கோதமனார் வேறு, பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தைப் பாடிய பாலைக் கோதமனார் வேறு என்பது, முன்னவர்க்குப் பாலை என்ற அடை இன்மையால் அறியப்படும். 14. தமிழ் வரலாறு பக். 239 245. 15. ஆராய்ச்சித் தொகுதி, பக். 70. 78. 16. Dr. S. K. Aiyangar, Ancient India, pp. 1-5. 17. செந்தமிழ், 1939 -40. 18. T.R. Sesha Iyangar, Dravidian India, p. 13. 19. முதற் கடற்கோளில் மதுரை அழிந்தது. அதன் நினைவாக இன்றைய மதுரை ஏற்பட்டது. அதுபோலவே பஃறுளியாறும் நிலமும் கடலில் அழுந்திய பின்பு, நெடியோன், பஃறுளி என்னும் பெயர் கொண்ட புதிய ஆற்றைத் தோற்றுவித்தான். அப்பெயர் காலப்போக்கில் பறளியாறு என மருவி நாஞ்சில் நாட்டில் பாய்கிறது. அவ்யாறே இப்பாட்டிற் குறிக்கப்பட்டது எனல் பொருந்தும். 20. சிலப். காதை 11, வரி 17 - 22; அழற்படுகாதை எனல் பொருந்தும். 21. G.E. Gerini, Further India, p. 646. r 22. இப்புதிய அரிய செய்தியை விளக்கிய பெருமை பெரும் புலவர் ரா. இராகவையங்கார் அவர்கட்கே உரியது. தமிழ் வரலாறு, பக். 322 - 343. 23. தமிழ் வரலாறு, பக், 322 -343. 24. இதை விளக்கமாக அறிய விரும்புவோர் செந்தமிழ்ச் செல்வி: 16-ஆம் சிலம்பில் மோரியர் படையெடுப்பு என்ற கட்டுரை காண்க. See also Dr. S. K. Aiyangar's Beginnings of S.I. History and Banerji’s ‘Prehistoric Hindu India' . 25. Chronology of Early Tamils. 26. K.A. N. Sastry, ‘Chlolas', Vol I, pp. 121-122. 27. History of Ceylon, vol. I. part I, pp. 175–195, 28. வேதத்தில் சொல்லப்பட்ட ச்ெய்திகளையும் புராணச் செய்திகளையும் கொண்டு வரலாறு எழுதிவரும் வரலாற்று ஆசிரியர்கள் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், நெடியோன், வான்மீகியார், கோதமனார், கரிகாலன் இமயப் படையெடுப்புப் பற்றிய பாடல்களைக் கட்டுக்கதை என்று தள்ளுதல் ஆராய்ச்சி அறமன்று. இவைபற்றி Jr. இராகவையங்கார், மு. இராகவையங்கார் போன்ற புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் செய்துள்ள ஆராய்ச்சிகளைத் தம் நூலில் குறிப்பிடாமல் விட்டதும் அறமாகாது. இங்ங்னம் கூற வேண்டுவனவற்றைக் கூறாது, சங்ககாலம் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என்பதை மட்டும் பல இடங்களில் விடாமல் எழுதுதலும் அறமாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/21&oldid=793279" இலிருந்து மீள்விக்கப்பட்டது