பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தொல்காப்பியர் காலம் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஜயங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன சங்க நூல்கள் எனப்படும். சங்ககாலம் என்பது ஏறத்தாழக் கி.பி. 300 உடன் முடிவு பெற்றது. அதன் தொடக்கம் கூறற்கியலாப் பழைமை வாய்ந்தது. இப் பரந்துபட்ட காலத்தில் பல இலக்கண நூல்களும் இலக்கிய நூல்களும் தோன்றின. அழியக் கூடிய பனையோலை ஏடுகளில் எழுதப்பட்ட காரணத்தாலும் கடல் கோள்கள் போன்ற பேரழிவுகளினாலும் பல அழிந்து போயின; போனவை போக, மேலே கூறப்பெற்ற நூல்கள் இன்று சங்கநூல்கள் என்னும் பெயரில் உயிர் வாழ்கின்றன. காலப்போக்கில் மறைந்தொழிந்த நூல்களின் பெயர்கள் சில தொல்காப்பிய உரை, சிலப்பதிகார உரை, யாப்பருங்கல உரை முதலிய உரைகளிற் காணக் கிடைக்கின்றன. - சங்க காலத் தமிழ் தொல்காப்பியர் தமக்கு முற்பட்ட இலக்கண ஆசிரியர் பலர் இருந்தனர் என்பதை, என்ப', 'என்மனார் புலவர் எனத் தம் நூலில் பல இடங்களில் குறித்துள்ளார்; யாப்பென மொழிட யாப்பறி புலவர் என்றாற் போலவும் பல இடங்களில் கூறியுள்ளார்; ஆயின், வட சொற்கள் தமிழில் வழங்குவதற்கு விதி கூறும் இரண்டு இடங்களிலும், என்ப', 'என்மனார் என்னும் சொற்களை ஆளாததை நோக்க, அவர்க்கு முன்பு இருந்த இலக்கண ஆசிரியர்கள் காலத்தில் பிறமொழிச் சொற்கள் தமிழிற் புகவில்லை என்பது தெரிகிறது; தெரியவே, தமிழ் தனித்தியங்கிய காலம் இருந்தது என்பது தெளிவாகிறதன்றே9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/22&oldid=793281" இலிருந்து மீள்விக்கப்பட்டது