பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கால ஆராய்ச்சி' “யானிழந்தனனே', 'யான் கண்டனனே விலனே' என வழங்கப்பெற்றுள்ளது. (9) பலர்பால் படர்க்கையில் வழங்கும் மார் ஈற்று முற்றுச் சொல் பெயர் கொள்ளாது வினை கொண்டு முடியும் என்பது தொல்காப்பிய விதி. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியும் என்ப. இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில் "உடம் பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டென" என மார் ஈறு பெயர் கொண்டு முடிந்துள்ளமை காணத்தகும். இதுவன்றிப் பாடன்மார் எமர்" எனப் புறநானூற்றிலும், “கானன்மார் எமர்" என நற்றிணையிலும் எதிர்மறையாய் நின்று பெயர்கொண்டு முடிந்துள்ளமையும் காண்க. (10) வியங்கோள் வினை, முன்னிலை தன்மை ஆகிய இரண்டு இடங்களிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடு மன்னா தாகும் வியங்கோள் கிளவி, இவ்வித் மாறாகப் புறநானூற்றில், “நடுக்கின்றி நிலீஇயரோ" என முன்னிலையில் வியங்கோள் வினை இடம் பெற்றுள்ளது. - (11) மோ என்னும் அசை முன்னிலைக்கு உரியது என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். மியாயிக மோமதி யிகுஞ்சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச் சொல்." இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில், "சென்மோ பெரும எம் விழவுடை நாட்டென' என மோ என்னும் அசை தன்மைக்கண் ஆட்சி பெற்றுள்ளது. (12) கைக்கிளை முதல் பெருந்திணை இறுதியாகக் கூறப்பட்ட அகப்பொருள் செய்திகள் கலிப்பாவிலும் பரிபாடலிலும் பாடுதற்குச் சிறப்பு உரிமை உடையன என்பது தொல்காப்பியத்தில். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட் டாயிரு பாவினும் உரிய தாகும் என்மனார் புலவர்" எனக் கூறப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/28&oldid=793294" இலிருந்து மீள்விக்கப்பட்டது