பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம் 21 இவ்விதிக்கு மாறாகச் சங்கத் தொகை நூல்களில் அகப்பொருள் செய்திகள் பெரும்பாலும் அகவற்பாவிலேயே அமைந்துள்ளன என்பது கவனிக்கத்தகும். தொல்காப்பியர் சங்கத்தொகை நூல்களுக்குப் பிற்பட்டவராயின், இங்ங்ணம் நூற்பா செய்திருப்பாரோ என்பது எண்ணத்தகுவதாகும். (13) தொல்காப்பியத்தில் சேயோன், மாயோன், வருணன், வேந்தன் என்னும் நானிலத் தெய்வங்களையும் கொற்றவையையும் எல்லா நிலத்திற்கும் உரியதாகிய கடவுளையும் குறித்துள்ளார்.” ஆயின், தொகை நூல்களில் முருகன், சிவன், கண்ணன், பலதேவன் ஆகிய நால்வரும் சிறப்புடைக் கடவுளராகப் போற்றப் பெற்றனர்.” ஞாயிறும் திங்களும் மழையும் தெய்வங்களாகச் சிலப்பதிகாரத்தில் போற்றப்பெற்றன. காமன் வழிபாடும் இருந்தது.” (14) பரிபாடல் அகப்பொருள் பற்றி வரும் என்றே தொல்காப்பியர் கூறியுள்ளார். கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும். இவ்விதிக்கு மாறாக இன்றுள்ள பரிபாடல்கள் கடவுள் வாழ்த்துப் பற்றி அமைந்துள்ளமை நோக்கத் தகும். 39 а “இதனால், கடவுள் வாழ்த்துக் கூறிய கடைச் சங்க காலப் பரிபாடற் செய்யுட் டொகை நூலுக்கு இவர் (தொல்காப்பியர்) இலக்கணம் முந்தியதாதல் ஒருதலை....... உரைகாரர்கள் கடவுள் வாழ்த்தைக் கடைச் சங்கப் பரிபாடலுட் கண்டு அதற் கிலக்கணம் தொல்காப்பியத்துள் அமைத்தற்குப் பல்வகையானும் முயன்று இடர்ப்படுதல் இதனால் உணரலாகும் ......... தொல்காப்பியனார் இப்பரிபாடற்குப் பிற்பட்டவராயின், தம் இலக்கணத்து இங்ங்னம் காமங் கண்ணாத கடவுள் வாழ்த்து வருதற்கும் இலக்கணம் கூறியே செல்வர் என்க." (15) அதோளி, இதோளி, உதோளி என்னும் சுட்டு முதலாகிய இகர இறுதிச் சொற்கள் கடைச் சங்க காலத்திலேயே வழக்கு வீழ்ந்தன என்பதைப் பேராசிரியர் கீழ்வருமாறு கூறியுள்ளார்: "ஒரு காலத்து வழங்கப்பட்ட சொல் ஒரு காலத்து வாராதாகப் பொருள் வேறுபடுதலுமுடைய, அதோளி, இதோளி, உதோளி எனவும், குயினெனவும் நின்ற இவை ஒரு காலத்துளவாகி இக் காலத்திலவாயின; இவை முற்காலத்துள வென்பதே கொண்டு வீழ்ந்த காலத்துஞ் செய்யுள் செய்யப்படா. அவை ஆசிரியர் நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/29&oldid=793296" இலிருந்து மீள்விக்கப்பட்டது