பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கால ஆராய்ச்சி செய்த காலத்துளவாயினும் கடைச் சங்கத்தார் காலத்து வீழ்ந்தமையிற் பாட்டினுந் தொகையினும் அவற்றை நாட்டிக் கொண்டு செய்யுள் செய்திலர், அவற்றுக்கு இது மரபிலக்கண மாகலி னென்பது." {: இங்ங்ணம் தொல்காப்பியத்திற்கும், தொகை நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் இவற்றிக்கும் உள்ள வேறுபாடுகள் மேலும் பலவாகும். அவற்றை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார் வெளியிட்டுள்ள, “தமிழ் வரலாறு', * * - ۹ سسس سگس-سسه- . . z - - . 40 "தொல்காப்பியம்" என்னும் நூல்களில் கண்டு தெளியலாம். மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் இவ்வேறுபாடுகளைக் குறிப்பிட்டு, "இவர் செய்யுள் பற்றியும், வழக்குப் பற்றியும் கூறியுள்ள இலக்கண - இலக்கியங்களிற் பலவற்றிற்கு இலக்கியம் காட்டுதல் இப்பொழுது வழங்கும் நூல்களைக்கொண்டு இயலாமையாலும், இவர் கூறிய இலக்கணங்களின் வேறாய்ச் சில சொற்களும் கொள்கைகளும் இந்நூல்களிற் காண்டலானும், இவர் இந்நூற்கெல்லாம் முந்தியவர் என்று துணிதல் ஒருதலையாவது,"40a என்று கூறியிருத்தல் தொல்காப்பியத்தின் பழைமையை நன்கு வலியுறுத்துவதாகும். பன்மொழிப் புலவர் வே. வேங்கடராசுலு ரெட்டியார் அவர்கள் தமது, "பரணர் என்ற ஆராய்ச்சி நூலில், "இலக்கண ஆசிரியர்கள், தம் காலத்தனவும் முந்தியனவுமான செய்யுட்களைக் கொண்டு இலக்கணம் செய்தல் மரபு. பரணர், கபிலர், நக்கீரர் இவர்கட்குப் பிற்பட்டவர் தொல்காப்பியராயின், அவர்தம் பாடல்களுக்கு முரணாக விதிகள் செய்திரார் அல்லவா? தொல்காப்பிய சூத்திர விதி கட்கும், அப்புலவர்களின் செய்யுட்களில் காணப்படும். சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும் சிறந்த இலக்கண மாறுபாடுகள் இருத்தல் ஒன்றே, தொல்காப்பியர், கடைச் சங்கப் புலவராய பரணர் முதலியோர்க்கும் பல நூற்றாண்டுகட்கு முற்பட்டவராவர் என்பது திண்ணம்" என்று வரைந்திருத்தல் கவனத்திற்குரியது. தொல்காப்பியர் இன்றுள்ள சங்க நூல்கட்குக் காலத்தால் முற்பட்டவர் என்பதைப் பேராசிரியர் மு.இராகவையங்கார் அவர்கள் பல சான்றுகள் காட்டி விளக்கியுள்ளார்கள். அவற்றைப் படித்து - - - - 4() உண்மையுணர்தல் நல்லது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/30&oldid=793300" இலிருந்து மீள்விக்கப்பட்டது