பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம் 23 இதுகாறும் காட்டப்பட்ட அகச் சான்றுகள் அனைத்தும் தொல்காப்பியர், புறநானூறு போன்ற சங்க நூல்களுக்குக் காலத்தால் முற்பட்டவர் என்னும் உண்மையை ஐயமற விளக்கி நிற்கின்றன என்பதை நன்குணரலாம். இம்முடிவினையோ வேறு சில புறச் சான்றுகளும் ஆதரித்து நிற்றலைக் கீழே காண்க. (1) பனம்பாரனார் எழுதிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் தமிழக எல்லைகள் கூறப்பட்டுள்ளன. வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து. இவ் வரிகளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள். குமரி என்பதைக் குமரியாறு எனவே கொண்டனர். "கடல் கொள்வதன் முன்பு பிற நாடும் உண்மையின் தெற்கும் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் பிற நாடு இன்மையின் கூறப்படாவாயின, ” என்பது இளம்பூரணர் தரும் விளக்கமாகும். அதுதானும் (தொல்காப்பியமும்) பனம்பாரனார், "வடவேங்கடம் தென்குமரி” எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரம் செய்தமை கடலகத்துப் பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையது" என்று பேராசிரியர் குறித்துள்ளார். வடக்கு தெற்குங் குணக்குங் குடக்கும் வேங்கடம் குமரி தீம்புனற் பெளவமென் (று) இந்நான் கெல்லை அகவையிற் கிடந்த நூலதின் உண்மை வாலிதின் விரிப்பின் என்று (பெருங்) காக்கையாடினியார் தெற்கே குமரியாற்றை எல்லை கூறினர். எனவே, அவர் தொல்காப்பிய ரோடு ஒரு சாலை மாணவர் என்று பேராசியர் கருதுவர். பின் வந்த (சிறு) காக்கைபாடினியார் வடதிசை ஒழிந்த மற்ற மூன்றிற்கும் கடலையே எல்லையாகக் குறித்தமை, வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/31&oldid=793302" இலிருந்து மீள்விக்கப்பட்டது