பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கால ஆராய்ச்சி என்னும் அடிகளால் உணரலாம். இங்ங்ணம் கூறியதால், அவர் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டவர் என்று பேராசிரியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்." நச்சினார்க்கினியர் இவரைப் பின் தோன்றிய காக்கை பாடினியார் என்பர். சிறு காக்கைபாடினியார் கூறிய எல்லைகளையே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் செய்யப் பெற்ற சிலப்பதிகாரமும், நெடியோன் குன்றமுந் தொடியோள் பெளவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நாடு என்று கூறுகிறது. தொல்காப்பியருக்குப் பின்பு, குமரியாற்றுக்குத் தென்பாற்பட்ட நிலப்பரப்புக்கும்." இன்றுள்ள குமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதி அழிந்துபட்டதால், தென்திசையும் கடல் எல்லையெனச் சிறு காக்கைபாடினியாராலும், இளங்கோவடிகளாலும் கூறப்பட்டதெனக் கொள்வதே பொருத்தமாகும். ஆகவே, தொல்காப்பியர், சிறு காக்கைபாடினியார் இளங்கோவடிகள் ஆகியோருக்குக் காலத்தால் முற்பட்டவர் என்பது காண்க. (2) தொல்காப்பியர், "எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி”த் தொல்காப்பியம் செய்தார் என்று பனம்பாரனார் தமது பாயிரத்தில் கூறியுள்ளார். அவர் கூறியதற்கு ஏற்பவே தொல்காப்பியம் எழுத்து சொல், பொருள் என மூன்று பகுதிகளாகவே வகுத்துரைக்கப் பட்டது. சிறு காக்கைபாடினியார் வாழ்ந்த பிற்காலத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றின்வேறாக யாப்பு என்னும் இலக்கணம் நான்காவதாக வகுக்கப் பெற்று வழங்கியது என்பது, நாட்டியல் வழக்கம் நான்மையிற் கடைக்கண் யாப்பின திலக்கணம் அறைகுவன் முறையே, என்று கூறியதிலிருந்து தெளிவாகும். இதற்கு ஏற்றாற் போலவே, பிற்காலத்தவராகிய களவியலுரை ஆசிரியரும், "தமிழ்தான் நான்கு வகைப்படும். எழுத்தும் சொல்லும் பொருளும் யாப்புமெனழு, என்று தமிழ் இலக்கணத்தை நான்கு வகையாகப் பகுத்தமை 乐厅G芷历。 குமரியாறு" தமிழகத்தின் தென் எல்லையாக இருந்த பொழுது தொல்காப்பியம் இயற்றப்பட்டது என்பதும், குமரியாற்றுக்கும் இன்றுள்ள குமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி அழிந்து கடலே தென் எல்லையாக அமைந்த பின்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/32&oldid=793304" இலிருந்து மீள்விக்கப்பட்டது