பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம் - 29 தொல்காப்பியர் தமிழகத்து நல்லாசிரியருடைய வழக்கையும் செய்யுளையும் அடியாகக் கொண்டு, செந்தமிழ் நாட்டுக்கு இயைந்த முன்னை இலக்கணங்களை முற்றக் கண்டு, எழுத்து - சொல் - பொருள் இலக்கணங்களை முறைப்பட ஆராய்ந்து தமது நூலைத் தொகுத்துச் செய்தார் என்பது பனம்பாரனார் பாயிரத்தால் தெரிகிறது. தொல்காப்பியர் நிலந்தரு திருவிற் பாண்டியன் தலைநகரான கபாடபுரத்தில், அதங் கோட்டாசான் தலைமையிற் பனம்பாரனார் போன்ற புலவர் பெருமக்கள் கூடிய பேரவையில் தொல்காப்பியத்தை அரங்கேற்றினார் என்பது சிறப்புப் பாயிரத்தால் புலனாகிறது. தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கை உடையவர்; எல்லாத் தெய்வங்களையும் ஒப்ப மதிப்பவர். அவர் இன்ன சமயத்தவர் என்று அறுதியிட்டுக் கூற இயலாது." 宛 發 1. பக். 86.127. 2. எழுத்ததிகாரம், நூற்பா 62. 3. செ. 1, 14, 102, 4. பெரும்பாணாற்றுப்படை, வரி 217; மதுரைக்காஞ்சி, வரி 112; மலைபடுகடாம், வரி 392. 5. செ. 84 6. குறள் 99, 112. 7. எழுத்ததிகாரம் 64 8. செ. 5, 74. 93. 9. செ. 59, 140, 388 10. செ. 30. 11. வரி 140. 12. எழுத்ததிகாரம் 55. 13. புறநானூறு 56; பெரும்பாணாற்றுப்படை, வரி 316 முல்லைப் பாட்டு, வரி 61; நெடுநல்வாடை, வரி 101; சிலப்பதிகாரம், காதை 5, வரி 10: காதை 14, வரி 67; காதை 29, வரி 25; மணிமேகலை, காதை 19, வரி 108 முதலியன. 14. எழுத்ததிகாரம் 159. 15. நூற்பா 442, 453, 462, 437, 475. 16. செ. 104. 17. எழுத்ததிகாரம் 438-411. 18. செ. 18. 19. குறள் 377, 20. சொல்லதிகாரம் 169. 21. குறள் 253, 919, 22. செ. 26. 23. சொல். 205 24. செ. 136, 201.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/37&oldid=793315" இலிருந்து மீள்விக்கப்பட்டது