பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் காலம் 33 'சிவஸ்கந்தவர்மனே காஞ்சியைக் கைப்பற்றிய குமாரவிஷ்ணு; அவன் காலம் ஏறத்தாழக் கி.பி. 325 - 350 என்பர். 5 வேறொருசார் ஆராய்ச்சியாளர் வேறு சில காரணங்களைக் காட்டிச் சிவஸ்கந்தவர்மன் காலம் ஏறக்குறையக் கி.பி. 300-325 என்பர்." இவையனைத்தையும் காண, தொண்டை நாட்டில் பல்லவராட்சி ஏறத்தாழ கி.பி. 300 இல் தொடங்கியிருக்கலாம் என்று கொள்வது பொருத்தமாகும். சுமார் கி. பி. 300 இல் தொண்டை நாட்டைக் கைப்பற்றி ஆளத்தொடங்கிய பல்லவர் கி. பி. 900 வரையில் தென்னிந்தியாவில் பேரரசராக இருந்தனர். அடிக்கடி சேர, சோழ, பாண்டியரோடு போரிட்டனர் என்பன வரலாறு கண்ட உண்மைகள் ஆகும். ஏறத்தாழக் கி. பி. 575 முதல் 900 வரை அப்பல்லவர் பேரரசு கிருஷ்ணை முதல் காவிரி வரையிலும் பரவியிருந்தது.' இங்ங்னம் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் இருந்த பல்லவரைப்பற்றி மிகப் பழைய தமிழ் நூல்கள் என்று கருதப்படும் மேற்சொன்ன தொகை [ುಹಾಗಿ! காவியங்களிலும் ஒரு குறிப்பும் காணப்படவில்லை. சிலப்பதி காரம், மணிமேகலை என்னும் இரண்டு காவியங்களும் காஞ்சியைப்பற்றிப் பல இடங்களில் குறித்தாலும், பல்லவ அரசருள் ஒருவரைப் பற்றியேனும் குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது. இஃது ஒன்றே, இக்காவியங்கள் பல்லவர்க்கு முற்பட்டவை என்பதை நன்கு விளக்குவதாகும்.” "கி. பி. 300 முதல் 350 வரையில் தென்னாட்டு வரலாற்றின் இருண்ட காலம் என்று கூறலாம். இது சங்க காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட இருண்ட காலம். இவ்விருண்ட காலத்தில் அளப்பரிய அதிராஜர்களை முடிதுறக்கச் செய்து களப்பிரர் என்னும் இனத்தார் தமிழகத்தை ஆண்டதாகத் தெரிகிறது." அவருள் அச்சுதவிக்கந்தன் என்னும் அரசன் சோழ நாட்டை ஆண்டு, பெளத்த சமயத்தை நன்கு ஆதரித்ததாக ஏறத்தாழக் கி. பி. 450 இல் வாழ்ந்த புத்ததத்தர் என்ற பெளத்த நூலாசிரியர் தம் நூல்களில் குறித்துள்ளார். ' இவ்வாறு தமிழரசரை முடிதுறக்கச்செய்த களப்பிரர் ஆட்சி வடக்கே சிம்மவிஷ்ணு பல்லவனாலும், தெற்கே கடுங்கோன் என்ற பாண்டியனாலும் கி. பி. 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொலைக்கப்பட்டு, வடக்கே பல்லவர் ஆட்சியும், தெற்கே பாண்டியர் ஆட்சியும் ஏற்படுத்தப்பட்டன." - இக்களப்பிரரைப் பற்றிய குறிப்புச் சிறிதேனும் மேற்சொன்ன சங்ககால நூல்களில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. இங்ங்னம் கி.பி. 300-க்குப் பிறகு தமிழகத்தில் நுழைந்து ஆதிக்கம்கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/41&oldid=793326" இலிருந்து மீள்விக்கப்பட்டது