பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கால ஆராய்ச்சி பல்லவரைப் பற்றியோ, களப்பிரரைப் பற்றியோ மேற்சொன்ன தொகை நூல்களிலும் காவியங்களிலும் ஒரு குறிப்பேனும் காணப்படாமை கொண்டே, அவை யாவும் கி. பி. 300க்கு முற்பட்டன என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ள தெளிவாக புலனாகும். சங்க காலம் எதுவாயினும் ஆகுக', சங்கம் மருவிய காலம் எதுவாயினும் ஆகுக. இவ்விரு காலங்களும் மேற்சொன்ன வரலாற்று உண்மைகளால் கி. பி. 300 க்கு முற்பட்டவை என்பது தெளிவு. திருக்குறளும் மணிமேகலையும் மேற்கூறிய சங்க நூல்களில் காலத்தால் பிற்பட்டவை சிலப்பதிகாரமும் மணிமேகலையும் என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை. எனவே, மணிமேகலையும் சிலப்பதிகாரமும் சங்க காலத்தின் இறுதிப் பகுதியில் செய்யப்பட்ட பெரு நூல்கள் என்று கருதுதல் பொருந்தும். இவற்றுள் ஒன்றான மணிமேகலையில் திருவள்ளுவரால் செய்யப்பட்ட திருக்குறள் பாக்களுள் ஒன்று அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது காண்க : தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை. (குறள் - 55) இக்குறட்பா மணிமேகலையில், தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் என்று மணிமேகலையைப் பாடிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரால் எடுத்தாளப்பட்டது. பரசுராமன் காலத்தில் வாழ்ந்த காந்தன் என்ற பழைய சோழன் மகன் ஒருவன் 'மருதி என்ற பார்ப்பன மங்கையைக் காவிரிக்கரையில் கண்டு காம உணர்ச்சியால் அழைத்தான். அவள் மனங்கலங்கி, "உலகில் மழைவளந்தரும் பத்தினிப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார். நான் இவன் உள்ளம் புகுந்தேன். இதற்குக் காரணம் யாது?" என்று சதுக்கப்பூதத்தை அணுகித் தன் மனக் கவலையை வெளியிட்டாள். அதற்கு அப்பூதம் மேற்சொன்ன மூன்று வரிகளையும் கூறியது என்பது வரலாறு. இது நிற்க, இவ்வாறு திருக்குறள் ஒன்றை வெளிப்படையாகத் தம் நூலில் கூறி அதனைச் செய்த ஆசிரியரைப் பொய்யில் புலவன் என்று வியந்து பாராட்டிய மணிமேகலை ஆசிரியர் காலம் யாது என்பதை முதற்கண் ஆராய்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/42&oldid=793328" இலிருந்து மீள்விக்கப்பட்டது