பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் காலம் 35 மணிமேகலையின் காலம் யாது? 1. மணிமேகலை ஆசிரியரான சாத்தனாரும், சிலப் பதிகார ஆசிரியரான இளங்கேர் அடிகளும் நண்பர்கள் என்பதும், செங்கட்டுவன் காலத்தவர் என்பதும் இவ்விருநூல் பாயிரங்களாலும் சிலப்பதிகார அகச்சான்றுகளாலும் அறியலாம். இச்சாத்தனார் வாய்மொழியால் கண்ணகியின் சிறப்பறிந்த செங்குட்டுவன், கண்ணகிக்குக் கோவில் கட்டி வழிபட்டதற்கும் அதற்கு இலங்கை அரசனான கஜபாகு (கயவாகு) மன்னன் வந்திருந்தான் என்பதற்கும் சிலப்பதிகாரமே சான்று பகர்கின்றது. கயவாகு என்னும் பெயருடைய அரசர் இருவர் முறையே கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலும், கி.பி. 12 ஆம் நூற்றாண்டிலும் ஆண்டனர் என்று இலங்கை வரலாறு கூறுகின்றது. இவருள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட கயவாகுவே ( கி. பி. 114- 136)" செங்குட்டுவன் காலத்து அரசனாதல் வேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர் அனைவரும் ஒப்புகின்றனர். அவனே பத்தினி விழாவில் கலந்துகொண்டு தன் நாட்டிலும் பத்தினிக்குக் கோவில் கட்டியவன் ஆவான். இன்றைக்கும் சிங்களவர் பத்தினி தெய்யோ என்று கண்ணகியைக் கொண்டாடுகின்றனர். இலங்கையில் இருந்துதான் பத்தினியின் உருவச்சிலை இலண்டன் பொருட்காட்சிச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 2. மணிமேகலை 27 ஆம் காதையில் கிருதகோடி என்னும் பெயர், வேதவியாசருடனும் சைமினி என்னும் ஆசிரியருடனும் பிரமாணங்கள் கூறுமிடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. கிருத கோடி என்பது மீமாம்சை சாத்திரமாகிய வேதாந்த சூத்திரத்திற்குப் போதாயனர் இயற்றிய உரை ஆகும் என்பது பிரபஞ்ச ஹிருதயம் என்னும் வடமொழி நூலில் கூறப்பட்டுள்ளது. அந்நூலில் இவ்வுரை மிக விரிவாக இருந்தது பற்றி உபவர்ஷர் என்பவர் அதனைச் சுருக்கி அமைத்தனர் என்பதும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த உபவர்ஷர் கி.பி. 3 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் என்பது ஆராய்ச்சியாளர் முடிபு. எனவே, அவருக்கு முற்பட்ட 'கிருத கோடி’ உரை எழுதிய போதாயனர் அவருக்கும் முற்பட்டவர்; ஏறத்தாழக் கி. பி. முதல் நூற்றாண்டின் அல்லது இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் ஆவர் என்று அறிஞர் கருதுகின்றனர்." இதனால், கிருதகோடி ஆசிரியரைக் குறிப்பிடுகின்ற மணிமேகலை, அவ்வுரை பெரிதும் வழக்கிலிருந்த கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்

- - 16

என்று கருத இடம் தருகிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/43&oldid=793330" இலிருந்து மீள்விக்கப்பட்டது