பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கால ஆராய்ச்சி 3. மணிமேகலை 29 ஆம் காதையிலும், பிற காதைகளிலும் குறிக்கப்பட்டுள்ள பெளத்த சமயக்கொள்கைகள் ஏறத்தாழக் கி. பி. 200-250 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலத்தில் வாழந்தவராக ஆராய்ச்சியாளரால் துணியப்படும் நாகார்ச்சுனர் என்பவரால் உண்டாக்கப்பட்ட மகாயான பெளத்த மதக் கொள்கைகள் அல்ல. அவை ஹlனயான பெளத்த மதக்கொள்கைகள். எனவே, மணிமேகலை காலத்தில் இருந்த தமிழகத்துப் பெளத்தமும், ஹlனயானத்தைச் சேர்ந்த செளத்ராந்திகப் பிரிவினது என்பது தெளிவாகும்." எனவே, நாகார்ச்சுனர் கொள்கைகள் தமிழகத்தில் பரவுவதற்கு முற்பட்ட காலத்தது மணிமேகலை என்று கருதுதல் பொருந்தும். 4. பெளத்த சமயத்துச் சாத்திய சித்தி பிரிவினரான அரிவர்மர் ஏறக்குறையக் கி. பி. 250இல் வெளிப்படுத்திய அநாத்மவாதக் கொள்கை மணிமேகலையில் இல்லை. இதனாலும் மணிமேகலை கி. பி. 250க்கு முற்பட்டது என்பது தெளிவாகும். 5. மணிமேகலை ஆசிரியரான சாத்தனார்க்கு நண்பனான செங்குட்டுவன், பத்தினிச் சிலைக்குக் கல் எடுக்க வடநாடு சென்றான் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது. அவன் எவ்வித எதிர்ப்புமின்றிக் கங்கையைக் கடந்து உத்தரகோசலத்தில் மட்டும் ஆரிய அரசரை வென்றான் என்று அந்நூல் கூறுகின்றது. இங்ங்னம் தமிழரசன் ஒருவன் வடக்கே படையெடுத்துச் செல்லத்தக்க வசதி கி.பி. முதலிரண்டு நூற்றாண்டுகளில் இருந்ததா எனின், ஆம். ஆந்திர அரசர் கங்கை வரையில் செல்வாக்குப் பெற்றிருந்தனர்; செங்குட்டுவன் கங்கையைக் கடக்க உதவி செய்தனர். கயவாகுவின் காலம் கி. பி. 114-136. ஆதலால், செங்குட்டுவன் படையெடுப்பும் இக் காலத்திலேயே நிகழ்ந்ததாதல் வேண்டும். இப்படையெடுப்பில் செங்குட்டுவன் நண்பரான நூற்றுவர் கன்னர் அவன் கங்கையைக் கடக்க உதவி புரிந்தனர் என்று சிலபதிகாரம் கூறுகின்றது. நூற்றுவர் கன்னர் என்பது சதகர்ணி என்னும் வடமொழித் தொடரின் மொழிபெயர்ப்பு என்பதை எளிதில் உணரலாம். உணரவே, அக்காலத்து ஆந்திரப் பெருநாட்டை ஆண்ட சதகர்ணி அரசன் செங்குட்டுவனுக்கு நண்பன் என்பது பெறப்படும். அக்கால ஆந்திர அரசன் கெளதமீ புத்திர சதகர்ணி என்பவன். இவன் காலம் கி. பி. 106.130." எனவே, சிலப் பதிகாரத்தில் குறிக்கப்பட்ட நூற்றவர் கன்னர், வரலாற்றுப் புகழ் பெற்ற சதகர்ணி அரசர் என்பது அறியத்தக்கது. இங்ங்ணம் வரலாறு கொண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/44&oldid=793332" இலிருந்து மீள்விக்கப்பட்டது