பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் காலம் 37 சமய உண்மைகள் கொண்டும் அறிஞர் கூறியுள்ள முடிவுகளைக் காணின், சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கி. பி. இரண்டாம் - 拳 4. முற் தி ெ * ப்பட் தல் ே - டும் என்பது நன்கு தெளிவாகும். திருக்குறளின் பழைமை கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செய்யப்பெற்றதாகத் துணியப்படும் மணிமேகலையில் திருக்குறள் ஆட்சி பெற்றது எனின், திருக்குறள் நூல் சாத்தனார் போன்ற புலவர்கள் படித்தறியத்தக்க நிலையில் நாட்டில் பெருமை பெற்றிருந்தது என்பது தெளிவாகும். ஆசிரியர் இக்குறளை ஆண்டுள்ள இடம் நன்கு கவனித்தற்குரியது. சோழ அரசருள் மிகப் பழையவனான (கரிகாலனுக்கும் முற்பட்ட) ககந்தன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த சதுக்கப்பூதம் மருதி என்னும் பார்ப்பணியை நோக்கி, தெய்வந் தொழாஅள்.............. பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் என்று கூறியதாகச் சாத்தனார் கூறியுள்ளார். ஒரு சாதாரண பார்ப்பனப் பெண்ணான மருதி இத் திருக்குறளின் கருத்தை அறிந்திருத்தல் வேண்டும் என்று சதுக்கப் பூதம் எதிர்பார்த்தது என்பது சாத்தனார் கருத்தாதல் தெளியலாம். இவ்வாறு ககந்தன் காலத்திலேயே திருக்குறள் அனைவராலும் அறியத்தகும் நிலையிலிருந்தது (அஃதாவது, மணிமேகலையின் காலத்துக்கு மிக முற்பட்டது திருக்குறள்) என்பதைச் சாத்தனார் சதுக்கப்பூதத்தின் வாயிலாக நமக்கு உணர்த்தும் திறன் வியந்து பாராட்டுதற்குரியது அன்றே? சாத்தனார் உணர்த்துவது உண்மை என்பதை மணிமேகலைக்கு முற்பட்டனவாகக் கருதப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்கள் திருக்குறள் சொற்களையும் தொடர்களையும் கருத்துக்களையும் எடுத்து ஆளுவதிலிருந்தும் நன்கறியலாம். திருச் ம் சங்க நால் - தமிழகத்தில் கி. பி. 300க்கு முற்பட்ட பல்வேறு காலங்களில் பல்வேறு ஊர்களில் வாழ்ந்த புலவர் பலர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாடிய பாக்களின் தொகுதியே எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும். இவை கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்குள்ளேயோ, அல்லது அதற்குப் பிற்பட்ட காலத்திலேயோ தொகுக்கப் பெற்றவை. இவற்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/45&oldid=793334" இலிருந்து மீள்விக்கப்பட்டது