பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் காலம் 39 3. வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். (குறள் 161) வீங்கிழை நெகிழ விம்மி யீங்கே எறிகட் பேதுற லாய்கோ டிட்டுச் சுவர்வாய் பற்றுநின் படர். (குறுந்தொகை 358) நிற்றுப்பத் 1. நின் மறங்கூறு குழாத்தர் (நான்காம் பத்து. 9) வீரர், தம் தலைவரது வீரத்தையே எடுத்தோதி மேம்படுதல் இயல்பு. இதனை, என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர். என்று வீரர் தம் தலைவனது சிறப்பைக் கூறும் குறளில் (771) காண்க. 2. தொலையாக் கொள்கைச் சுற்றத்தார் (ஏழாம் பத்து. 10) தம்மால் சுற்றப்பட்ட தலைவன் செல்வம், வலிமை முதலியன அற்றபோதும் அவனை நீங்காது பழைமை பாராட்டும் பண்பினர் ஆதலின் சுற்றத்தார் இங்ங்னம் சிறப்பிக்கப்பட்டனர். இக்கருத்தை. பற்றற்ற கண்ணும் பழைமையா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள. என்னும் குறளில் (521) காண்க. 3. நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலி னுண்டென் னுயிர். (குறள் 1213) கனவினும் பிரியா வுறையுளொடு......... மீனொடு புரையுங் கற்பின் வாணுதல் அரிவை.......... (ஒன்பதாம் பத்து, 9) பரிபாடல் 1. காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நானுத்தாழ் வீழ்த்த கதவு. (குறள் 1251) காமக் கணிச்சியாற் கையறவு வட்டித்துச் சேமத் திரைவீழ்த்துச் சென்றமளி சேர்குவோர் (பரிபாடல் 10, வரிகள் 33-34) 2. இலனென்னும் எவ்வம் உரையாமை யிதல் குலனுடையான் கண்ணே யுள. (குறள் 223)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/46&oldid=793337" இலிருந்து மீள்விக்கப்பட்டது