பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கால ஆராய்ச்சி இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன் அல்லது வெஃகி வினைசெய்வார் (பரிபாடல் 10, வரிகள் 87- 88) 3. ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். (குறள் 581) புடைவரு சூழல் புலமாண் வழுதி மடமயி லோரும் அனையவ ரோடுங் கடனறி காரியக் கண்ணவ ரோடுநின் சூருறை குன்றிற் றடவரை யேறி (பரிபாடல் 19, வரிகள் 20, 23) கலித்தொகை 1. காமமும் நாணு முயிர்காவாத் தூங்குமென் நோனா உடம்பி னகத்து. (குறள் 1163) நலிதரும் காமமுங் கெளவையும் என்றிவ் வலிதின் உயிர்காவாத் துங்கியாங் கென்னை நலியும் விழுமம் இரண்டு (கலித்தொகை 142) 2. காம முழந்து வருந்தினார்க் கேமம் மடலல்ல தில்லை வலி. (குறள் 1131) காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேமம் எழினுத லீத்தவிம் மா (கலித்தொகை 139) 3. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில். (குறள் 549) குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் வியன்றானை விடுவழி விடுவழிச் சென்றாங்குஅவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே (கலித்தொகை 130) 4. துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால் நெஞ்சத்த ராவர் விரைந்து. (குறள் 12.18) தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமையெடுத்துப் பற்றுவேன் என்றியான் விழிக்குங்கால் மற்றுமென் நெஞ்சத்துள் ளோடி யொளித்தாங்கே துஞ்சாநோய் செய்யும் அறனில் அவன் (கலித்தொகை 144) அகநானூறு 1. மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. (குறள் 60)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/47&oldid=793338" இலிருந்து மீள்விக்கப்பட்டது