பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் காலம் 41 1. கடவுட் கற்பொடு குடிக்குவிளக் காகிய புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின் (அகநானூறு 184) நன்ன ராட்டி.......... தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. - (குறள் 1103) செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள்சேர்பு எய்திய கனைதுயில் ஏற்றொறுந் திருகி மெய்புகு வன்ன கைகவர் முயக்கின் மிகுதிகண் டன்றோ இலனே (அகநானூறு 379) செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. (குறள் 1151) வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ நின்றாங்குப் பெயருங் கானஞ் சென்றோர் மன்னென இருக்கிற் போர்க்கே (அகநானூறு 387) புறநானூறு சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினுங்(கு) ஆக்கம் எவனோ உயிர்க்கு. (குறள் 39) சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் (புறம் 31) 2. அறத்து வழிப்படுஉம் தோற்றம் போல எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (குறள் 110) நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் - செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டிற்றே ஆயிழை கணவ. (புறம் 34) பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். (குறள் 528) வரிசை யறிதலோ வரிதே பெரிதும் ஈத லெளிதே மாவண் தோன்றல் அதுநற் கறிந்தனை யாயிற் பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே (புறம் 121) ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் சான்றோன். எனக்கேட்ட தாய். (குறள் 69)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/48&oldid=793340" இலிருந்து மீள்விக்கப்பட்டது