பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கால ஆராய்ச்சி நரம்பெழுந் துலறிய நிரம்ப்ா மென்றோள் ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே. (புறம் 278) பத்துப் பாட்டு 1. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். (குறள் 528) வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த, (சிறுபாணாற்றுப்படை, வரிகள் 217 - 2.18) 2. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து) ஊதியம் இல்லை உயிர்க்கு. (குறள் 231) உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன் lவார்மேல் நிற்கும் புகழ். (குறள் 232)

  • * * * * - - - - - - , a 4 + 2 + a 4 - - - - - - - - * * * * * * * * * - - - விழுநிதி

யீதல் உள்ளமொ டிசைவேட் குவையே - (மதுரைக் காஞ்சி, வரிகள் 204 -205) 3. வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். (குறள் 85) விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை நின்னோ டுண்டலும் புரைவதென் றாங்கு” (குறிஞ்சிப் பாட்டு, வரிகள் 206 - 207) இங்ங்ணம் குறட்பாக்களையும் அவற்றின் தொடர்களையும் கருத்துக்களையும் தம் பாக்களில் எடுத் தாண்டவர்கள் பல்வேறிடத்தவர் - பல்வேறு காலத்தவர். ஆதலின், அவர்தம் காலத்திற்கும் முன்னரே திருக்குறள் அறப்பெரு நூலாக நாட்டில் வழக்குப் பெற்றிருந்தது என்னும் உண்மை தெற்றென விளங்கும். சிலப்பதிகாரமும் திருச் o சிலப்பதிகாரத்திலும் Ls (o) இடங்களில் திருக்குறட் சொற்களும் கருத்துக்களும் பயின்று வருகின்றன. அவற்றுள் இரண்டினைக் காண்க: 1. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும். (குறள் 319) முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறுஉம் பெற்றிகாண். (சிலம்பு, காதை 21, வரிகள் 3 -4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/49&oldid=793342" இலிருந்து மீள்விக்கப்பட்டது