பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் காலம் 43 2. தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் 55) தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால். (சிலம்பு, காதை 23) இங்ங்னமே சங்க காலத்திற்குப் பிற்பட்ட பெருங்கதை." சைவத் திருமுறைகள், ஆழ்வார்களின் அருட் பாடல்கள் முதலிய அனைத்திலும் குறட்பாக்களும் அவற்றின் தொடர்களும் கருத்துகளும் மிகப் பலவாகக் கையாளப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நோக்க, இன்றுள்ள சங்க நூற் பாடல்கள் முதல், பின் நூல்கள் அனைத்திற்குமே திருக்குறள் போற்றத்தக்க அறநூலாக விளங்கி வந்தது என்பது எளிதில் புலனாகும். திருவள்ளுவர் காலம் ஆயினும், திருவள்ளுவர் ஏறக்குறைய எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்னும் கேள்வி எழுதல் இயல்பு. அதற்கு ஒருவாறு விடை காணல் நமது கடமையாகும். 1. திருவள்ளுவர் காலம் சங்ககாலத்தின் முற்பகுதியைச் சேர்ந்தது என்று கூறுவோரும், சங்ககாலத்திற்குப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவோரும், இன்றுள்ள சங்கப் பாடல்களிற் பல ஏறத்தாழக் கி.பி. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்பதை ஒப்புகின்றனர். இதை நோக்க, நாம் இதுகாறும் கண்ட சான்றுகளைக்கொண்டு, திருவள்ளுவர் காலம் இம்முதலிரண்டு நூற்றாண்டுகட்கும் முற்பட்டதெனக் கருதலாம். 2. கசந்தன்' என்ற பழைய சோழ அரசன் காலத்திலேயே திருக்குறள் அறிவைப் பொதுமக்களிடம் சதுக்கப்பூதம் எதிர்பார்த்தது என்று கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாத்தனார் கூறுவதால்." திருக்குறளின் பழைமை நன்கு புலனாகும். ஆகவே, வரலாற்றின் துணைகொண்டு காலம் கூறமுடியாத ககந்தனுக்கும் முற்பட்டது திருக்குறள் எனக் கருத இடமுண்டாகிறது. 3. திருக்குறளைப் பாராட்டிச் சங்கப் புலவர்கள் பாடியனவாகக் கருதப்படும் 'திருவள்ளுவ மாலை ஆராய்ச்சிக்குரியது; அப்புலவர்கள் பாடிய தொகை நூற்பாக்களை ஆராயின், அவர்கள் பல்வேறு காலத்தவர் என்பது அறியக் கிடக்கின்றது. எனவே, பல்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர் பாடிய பாக்கள், பிற்காலத்தில் புறநானூறு போன்ற தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்டாற்போல, பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/50&oldid=793346" இலிருந்து மீள்விக்கப்பட்டது