பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் காலம் 47 காவியங்களிலும் குறட்பாக்களின் சொற்களும் தொடர்களும் கருத்துக்களும் ஆளப்பட்டிருத்தலின், அப்பாக்களுக்கு முற்பட்டது திருக்குறள் என்பதும் தெளியலாம். தெளியவே, வேறு தக்க சான்றுகள் கிடைக்கும் வரையில், திருவள்ளுவர் காலம் ஏறத்தாழக் கி.மு. 1 முதல் 300க்கு உட்பட்டது என்று கோடலே அமைவுடையதாகும். குறிப்புகள் 1. Pallavas of Kanchi by R. Gopalan, Appendix No. 7. 2. Pallavas of Kanchi by R. Gopalan, p. 33. 3. Ibid, pp. 35 - 36. 4. Ibid, p. 36. 5. Studies in Pallava History by F. H. Heras, pp. 9. - 14, 23, 6. Successors of the Satavahanas by D. Sircar, pp. 164 - 166, 247 - 248. 7. Pallavas of kanchi, pp. 83 - 84, 142. 8. Pandyan kingdom by K.A.N. Sastry, p.19. 9. W.R.R. Dihshitar's int. to Silappadikaram by R.K.S., p. 13, 10. History of India by K.A.N. Sastry, Part I, p. 147. 11. History of Pali Literature by B.C.Law, Vol. II, pp. 384, 385 & 389. 12. History of India by K.A.N. Sastry, Part i. p. 148. 13. மணிமேகலை, சிறைசெய் காதை, வரி 59- 61. 14. History of Ceylon, Vol. I, Part I, pp. 183-185. 15. Vedanta Comentators before Sankaracharya by P. V. Kane, Proceedings, Fifth Oriental Conference, Vol. II. 16. ‘Manimekali in its Historical Setting' by Dr. S. K. Ayyangar, pp. 61-67. 17. Buddhistic Studies' Compiled by B. C. Law, pp. 11-17. K. A. N. Sastry, Cholas (2nd ed.), pp. 55-56. 18. “Manimekalai in its Historical Setting, pp. 79-95. 19. R. Sathyanatha Ayyar, History of India, Vol. I, p. 207.

  • திருக்குறட் கருத்துக்களையும் தொடர்களையும் சொற்களையும் சங்கப் புலவர்கள் ஆண்டனர் என்பதற்கு மாறாக, சங்கப் புலவர்தம் பாக்களை நன்றாகப் பயின்று அக் கருத்துக்களைத் திருவள்ளுவர் தமது அறநூலில் பெய்து வைத்தார் என்று ஏன் கொள்ளலாகாது? அங்ங்னம் கொள்ளின், திருவள்ளுவர் சாத்தனார் காலத்திற்கு முன்னும், சங்கப் புலவர்க்குப் பின்னும் வாழ்ந்தவராகக் கொள்ளலாமே என்று சிலர் கருதலாம்.

புலவர் பலர் ஒர் அறநூலிலிருந்து கருத்துக்களை எடுத்துத் தம் பாக்களில் பயன்படுத்தலே பெருவழக்குடையது. அங்ங்ணம் பயன்படுத்துவோர், அறநூல் மேற்கோளை அப்படியே கையாளலும் அதனைப் பல அடிகளால் விரித்துக் கூறலுமே இயல்பு. தொகை நூல்களில் இந்த முறையினைக் காணலாம். திருக்குறள் இரண்டு அடிகளால் இயன்றது. சங்க காலப் புலவர்களோ, இரண்டடிக் (குறட்) கருத்துக்களைப் பல அடிகளில் விளக்கிக் கூறியுள்ளனர். இந்த உண்மையை நன்கு உளங்கொள்ளின், திருக்குறட் கருத்துக்களையே பின் வந்த சங்க காலப் புலவர் கையாண்டனர் என்பதைத் தெளியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/54&oldid=793354" இலிருந்து மீள்விக்கப்பட்டது