பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கால ஆராய்ச்சி மேலும், அறம் பாடிற்றே என்று தெளிவாகச் சங்க காலப் புலவர் தம் பாடலுள் 20, 2}. 22. 23. 24. (2 ) 25. 26. 27. 28, 29, 30. 3i. சுட்டியிருத்தல் கவனிக்கத்தக்கது. வடமொழியிலுள்ள தர்ம சூத்திரங்கள் உரை நடையில் இயன்றவையே தவிரப் பாட்டால் இயன்றவையல்ல. பாட்டாலியன்ற பழைமையும் பெருமையும் உடைய அறநூல் திருக்குறள் ஒன்றேயாதலின், அதனையே புலவர் சுட்டினாரெனக் கொள்ளுதல் ஏற்புடையது. எனவே, சங்க காலத்திலேயே திருக்குறள் சங்கப் புலவர் பாராட்டுக்கு உரியதாக இருந்தது எனக் கோடலே ஏற்புடைத்து. குணாட்டியர் பைசாச மொழியில் செய்த பிருகத் கதையைக் கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் இடையில் கங்க நாட்டு அரசனாக இருந்த துர்விநீதன் வட மொழியில் இயற்றினான். அதனைப் பின்பற்றியே கொங்குவேளிர் என்பவர் தமிழில் பெருங்கதையைப் பாடியுள்ளார். எனவே, அந் நூலின் மேல் எல்லை ஏறத்தாழக் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு என்னலாம். இப்பெயர் அப்பண்டைக் காலச் சோழனுக்கு வழங்கியதென்பது ஐயத்திற்குற்குரியது. * சாத்தனார் தாமறிந்த குறட்பாவைச் சதுக்கப்பூதத்தின் வாயிலாகத் தெரிவித்தாரேயன்றி வேறன்று எனக் கருதுவோரும் உளர். அங்ங்னம் சாத்தனார் கூறியிருப்பாரேல் அது காலவழு (Anachronism) எனப்படும். மணிமேகலைக்கு முற்பட்ட சங்கப் பாடல்களிலேயே குறட் கருத்துக்களும் சொற்களும் ஆளப்பட்டிருத்தலின், சாத்தனார் கூறியிருத்தல் காலவழு என்னும் குற்றத்தின்பாற்படாது எனக் கொள்ளலாம். நாவலர் சோமசுந்தர பாரதியார், "திருவள்ளுவர்", ப.4 (1) திருக்குறளில் காணப்படும் ஒருசில சொற்களையும், வடமொழிச் சொற்களையும் தொடர்களையும் கொண்டும், குறளில் காணப்படும் கருத்துக்கள் சில வடமொழி நூல்களில் காணப்படுதல் கொண்டும், குறள் மேலே கூறப்பெற்ற சங்க காலத்திற்கும் பிந்தியது என்று கூறும் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் கூற்றும், அதனைப் பேராசிரியரும் பெருநாவலருமாகிய டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்களும், அறிஞர் பழநியப்ப பிள்ளை அவர்களும், மறுத்து எழுதியுள்ள கட்டுரைகளும் எனது "திருவள்ளுவர் காலம்” என்னும் தனி நூலில் தரப்பட்டுள்ளன. அவற்றைப் படித்தல் நலம். Studies in Tamil Literature and History by V.R.R. Dikshitar, pp. 133., 150 — 176, செய்யுளியல் 102. எழுத்ததிகாரம் 1. கற்பியல் 20. நூற்பா 171. திருவள்ளுவர் (ஆங்கில நூல்), பக். 5 - 18. History of Ceylon, vol. I, Part I, p. 207. ரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு, ப. 273.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/55&oldid=793357" இலிருந்து மீள்விக்கப்பட்டது