பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பத்துப்பாட்டின் காலம் முன்னுரை ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய தொகைநூல்கள் அகவற்பாவில் அமைந்தவை. அவ்வாறே, புறநானூற்றுப் பாடல்களும் அகவற்பாவில் அமைந்தவையே. அகநானூற்றுப் பாடல்கள் 13 அடிச்சிறுமையும் 31 அடிப் பெருமையும் உடையவை. புறநானூற்றில் 40 அடிப் பெருமையுள்ள பாடலும் (395) இடம் பெற்றுள்ளது. பதிற்றுப்பத்தில் 57 அடிகளைக் கொண்ட பாடலும் (90) இடம் பெற்றுள்ளது. ஆயின், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட அகவற்பாக்களும் உண்டு. அத்தகைய நீண்ட பாடல்கள் பத்தின் தொகுதியே பத்துப்பாட்டு எனப்படும். பத்துப்பாட்டு என்பவை - திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகும். இப்பத்தும் முறையே 317, 248, 269, 500, 103, 782, 188, 261, 301, 583 அடிகளைக் கொண்டவை. இவற்றுள் மிகச் சிறியது முல்லைப்பாட்டு (103 அடி); மிகப் பெரியது மதுரைக்காஞ்சி (782 அடி). பத்துப்பாட்டு என்னும் பெயர் இறையனார் அகப்பொருளுக்கு நக்கீரர் உரை கண்டார் என்பது இறையனார் அகப்பொருள் உரையிற் கூறப்பட்டுள்ளது. அவ்வுரையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டியன் நெடுமாறன் மீது பாடப்பட்ட பாண்டிக்கோவையின் செய்யுட்கள் காணப்படுகின்றன; நாலடியார், சீவகசிந்தாமணி முதலிய நூல்களின் கருத்தும் சொற்றொடரும் காணப்படுகின்றன. எனவே, அவ்வுரை கி.பி. 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது என்னலாம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/56&oldid=793359" இலிருந்து மீள்விக்கப்பட்டது