பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கால ஆராய்ச்சி அக்களவியல் உரையில் கடைச்சங்க நூல்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அப்பட்டியலில் பத்துப் பாட்டு இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அக்காலத்தில் பத்துப் பாக்களும் தொகுக்கப்பட்டிருக்குமாயின், அத்தொகுப்பின் பெயர் அவ்வுரையில் இடம் பெற்றிருக்குமன்றோ? இளம்பூரணர் என்பவர் தொல்காப்பிய உரையாசிரியருள் காலத்தால் முற்பட்டவர். அவர் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்னலாம். அவர் பத்துப்பாட்டு ஒவ்வொன்றையும் அதனதன் தனிப் பெயர் கொண்டே கூறியுள்ளார். கி.பி. 13 ஆம் நூற்றாண்டினரான பவணந்தி முனிவர்க்குப் பிற்பட்டவரான (கி.பி. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டினரான) பேராசிரியர்' இத்தொகுதியைப் பாட்டு (செய்யுளியல் நூற்பா 50, 80 உரை) என்றே குறித்துள்ளார். இதனை நோக்க, இப்பாடல்கள் இளம் பூரணர்க்குப் பின்பும் பேராசிரியருக்கு முன்பும் தொகுக்கப்பட்டன என்பது தெரிகிறது. ஆயின், அப்பொழுதும் இத்தொகுதிக்குப் பத்துப்பாட்டு என்னும் பெயர் அமையவில்லை என்பது கவனிக்கத்தகும். மயிலைநாதர் என்பவர் நன்னூலுக்கு உரை வரைந்தவர். இவர் கி.பி. 14 ஆம் அல்லது 15 ஆம் நூற்றாண்டினர் என்னலாம்.' இவரே நன்னூல் நூற்பா 387 இன் உரையில் பத்துப்பாட்டு என்று முதன்முதலாகக் கூறியுள்ளார். ஆதலின், பேராசிரியர்க்குப் (கி.பி. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டிற்குப்) பின்பே இந்தத் தொகுதிக்குப் பத்துப்பாட்டு என்று பெயர் வழங்கலாயிற்று என்று கொள்வது ப்ொருத்தமாகும்." பத்துப்பாட்டின் காலம் முடத்தாமக்கண்ணியார் என்ற புலவர் கரிகாலன் மீது பொருநர் ஆற்றுப்படையைப் பாடியுள்ளார். கடியலூர் உருத்திரன் கண்ணனார் என்ற புலவரும் கரிகாற்சோழன் மீது பட்டினப்பாலையைப் பாடியுள்ளார். இப்புலவரே தொண்டைமான் இளந்திரையன்மீது, பெரும்பாணாற்றுப்படையைப் பாடியுள்ளார். ஆதலால், கரிகாலனும் இளந்திரையனும் ஏறக்குறைய ஒரு காலத்தவர் என்பது தெளிவாகத் தெரிகிறதன்றோ? கரிகாற்சோழன் காலம் ஏறத்தாழக் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக இருக்கலாம் (கி.பி. 75 -115) என்பது முன்பே குறிக்கப்பட்டது. மாங்குடி மருதனார் என்ற புலவர் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்மீது மதுரைக்காஞ்சியைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/57&oldid=793361" இலிருந்து மீள்விக்கப்பட்டது