பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப்பாட்டின் காலம் 51 பாடியுள்ளார். நக்கீரர் என்ற புலவரும் அதே அரசன்மீது நெடுநல்வாடையைப் பாடியுள்ளார். நக்கீரர் அகநானூற்று 141 ஆம் செய்யுளில், செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால் வெல்போர்ச் சோழன் என்று குறித்துள்ளார். இவர் கரிகாலன் காலத்தவர் என்பதற்குச் சான்றில்லை. எனவே, இவர் கரிகாலனுக்குப் பிற்பட்டவர் என்பதே பொருந்தும். ஆகவே, நக்கீரரால் பாடப்பட்ட நெடுஞ்செழியனும் கரிகாலற்குப் பிற்பட்டவன் என்று கொள்வதே பொருத்தமாகும். கரிகாலனைப் பாடிய புலவருள் ஒருவரேனும் இந்நெடுஞ்செழியனைப் பாடாமையும் இவ்வுண்மையை உறுதிப் படுத்துகிறது என்னலாம். பெருங்கெளசிகனார் என்ற புலவர் நன்னன் சேய் நன்னனைப்பற்றி மலைபடுகடாம் பாடியுள்ளார். இந்நன்னன் சிறந்த கொடைவள்ளல் என்று மலைபடுகடாம் (வரி 71-72) புகழுதலை நோக்க, மதுரைக்காஞ்சியில் வரும், பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட் சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு என்னும் அடிகள் (318-319) இந்நன்னனைப் பற்றியன என்று கருதுதல் பொருத்தமாகும்." இங்ங்ணம் கொள்ளின், மாங்குடி மருதனார் காலத்திலோ சிறிது முற்பட்டோ மலைபடுகடாம் பாடப்பட்டது என்று கருதலாம். பதிற்றுப்பத்து என்னும் நூலில் உள்ள எட்டுப் பத்துக்களும் கால முறைப்படி அமைந்து உள்ளன. அவற்றுள் ஜந்தாம் பத்தைப் பரணர் பாடியுள்ளார். ஏழாம் பத்தைக் கபிலர் பாடியுள்ளார். இவ்விருவரும் பேகனைப் பாடியுள்ளனர்.” ஆதலின், கபிலர் பரணரது முதுமைக் காலத்தில் இளைஞராய் இருந்தவர் என்று கருதுதல் தகும். பரணர், கரிகாலன் தந்தையாகிய உருவப்பல்தேர் இளஞ்சேட் சென்னியைப் பாடியுள்ளார் (புறநானூறு 4). எனவே, கபிலர் ஏறத்தாழக் கரிகாலன் காலத்தில் குறிஞ்சிப் பாட்டைப் பாடினார் என்று சொல்லுதல் பொருத்தம் ஆகும். மேலும், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரவேந்தன் மதுரைக்காஞ்சிக்கு.உரிய பாண்டியன் நெடுஞ்செழியனிடம் தோற்றவன். அவன் தனது பாட்டில் (புறம் -53), கபிலன் இன்றுள னாயின் நன்றுமன் என்று கூறியுள்ளான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/58&oldid=793363" இலிருந்து மீள்விக்கப்பட்டது