பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப்பாட்டின் காலம் 57 வளர்க்கும்படிக் கார்த்திகை மாதர்கள் அறுவரை ஏவினர் (114-15). அவ்வறுவரும் தன்னை நோக்கி அன்புடன் வருதலைக் கண்ட அறுமுக ஒருவன் வேறாய் அச்சிறார் உருவம் கொண்டான் (செ. 116). திருமுருகாற்றுப்படை குறிக்கும் முருகன் பிறப்பும் வளாபபும சிவபிரானிடமிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகளை முதலில் ஏற்றவன் காற்றுக் கடவுள் (ஐவருள் ஒருவன்) என்பது கந்த புராண வரலாற்றால் தெரிகிறது. அவன் அவற்றை முதலில் தன் அங்கையில் ஏற்ற பின்னரே தலைமீது வைத்திருத்தல் இயல்பாகும். முருகன் கார்த்திகைப் பெண்கள் தன்னை அடைவதற்கு முன்பு ஆறுமுகங்களைக் கொண்ட ஒரே குழந்தையாய் இருந்தான். பின்னரே தாய்மார் அறுவர்க்கு ஏற்ப ஆறு குழந்தைகளாய் மாறினான் என்பது கந்தபுராண வரலாறு. ஆயினும் முனிவர் மனைவியர் அறுவரே ஆறுபிள்ளைகளைப் பெற்றனர் என்பது பரிபாடற் செய்தியாகும். அறுவர் பயந்த ஆறமர் செல்வ என்று திருமுருகாற்றுப்படையில் குறித்தமை, ஆறு தீப்பொறிகளிலிருந்து பிறந்த முருகனை அறுவர் பாலூட்டி வளர்த்தமை பற்றி உபசார வழக்காய் அமைந்ததாகும். கண்ணனைப் பெற்றவள் தேவகி; வளர்த்தவள் யசோதை. ஆயினும், யசோதை கண்ணனை நோக்கி, 'பெற்ற எனக் கருளி (1 : 5 , 8) என்று கூறியதாகப் பெரியாழ்வார் பாடியுள்ளார். என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தை எய்துவித்த இருடி கேசா முலையுணாயே (2 : 2 : 6) என்று யசோதை கண்ணனைப் பாலருந்த அழைத்ததாகப் பெரியாழ்வார் பாடியுள்ளமை காணத் தக்கது. உன்னைப் பெற்ற குற்றமல்லால்' (3 7) என்று பிறிதோரிடத்திலும் யசோதை கூறுவதாகப் பெரியாழ்வார் பாடியுள்ளார். இவ்வுபசார வழக்குப் பற்றியே வளர்த்த கார்த்திகை மகளிர் அறுவரும் முருகனைப் பயந்தவர்' என்று நக்கீரர் பாடியதாகக் கொள்வதே இங்குப் பொருத்தமாகும். முருகன் சிவனது வீரியத்திலிருந்து பிறந்ததை விளக்கமாகக் கூறும் (வரி 26-55) பரிபாடல் (செ 5), 81 அடிகளை உடையது. நக்கீரர் இக்கதையையே கூற விரும்பியிருப்பின் 317 அடிகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/64&oldid=793377" இலிருந்து மீள்விக்கப்பட்டது