பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கால ஆராய்ச்சி கொண்ட திருமுருகாற்றுப்படையில் பரிபாடலைப் போலவே இந்நிகழ்ச்சியை விரித்துக் கூறியிருக்கலாம். அவர் அங்ங்ணம் கூறாது, ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ என இரண்டே அடிகளிற் கூறியிருத்தல், முருகன் பிறப்புப் பற்றிய பரிபாடற் செய்தி அவர்க்கு உடன்பாடின்மையை உய்த்துணர வைப்பதாகும். 'ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப என்பது, சிவனிடமிருந்து முதன் முறையாக வீரியத்தையோ அல்லது தீப் பொறிகளையோ தன் கைகளிற் பெற்றுக் கொண்ட ஐவருள் ஒருவனையே உணர்த்தும். பரிபாடற் கதைப்படி சிவனிடமிருந்து வீரியத்தை முதலிற் பெற்றவன் இந்திரன். இந்திரன் ஐவருள் ஒருவனாகான். அவனிடமிருந்து முனிவர் அதனைப் பெற்றனர். அவர்கள் அதனை வேள்வித் தீயில் இட்டார்கள். இங்ங்னம் இரண்டு கைமாறிய செய்தியை நக்கீரர் குறிக்க விரும்பியிருப்பின், அதனைத் தெளிவாகக் குறித்திருக்கலாம். இவர் அங்ங்னம் குறிக்கவில்லை. கந்தபுராணச் செய்திப்படி சிவனுடைய பொறிகள் ஆறினையும் தன் தலைமீது வைத்துக் கொண்டவன் காற்றுக் கடவுளாவான். அவன் அவற்றைக் கையில் வாங்கித் தானே தன் தலைமீது வைத்திருத்தல் கூடும்! எனவே, கந்தபுராணச் செய்தியே இவ்வடிகளுக்குப் பொருத்தமென்பது தெரிகிறது என்று கூறலாம். பரிபாடலில் முருகனைப்பற்றி எட்டுப் பாடல்கள் உள்ளன. அவற்றைப் புலவர் எழுவர் பாடியுள்ளனர்; 5 ஆம் பாடலைப் பாடிய கடுவன் இளவெயினனார் போலவே, ஆசிரியர் நல்லந்துவனார் 8 ஆம் பாடலில், முருகன் சிவனுக்கும் உமையம்மைக்கும் பிறந்தவன் (வரி 127-128) என்று கூறியுள்ளார். சிவனுடைய தீப்பொறிகளிலிருந்து முருகன் பிறந்தான் என்று கந்தபுராணம் கூறும் செய்தி முருகனைப் பற்றிய எட்டுப் பரிபாடல்களிலும் இல்லாமை கவனிக்கத்தகும். இந்தப் பிற்செய்தி சங்க காலத் தமிழகத்தில் வழக்குப் பெற்றிருப்பின், மேலே சொல்லப்பட்ட புலவர் எழுவருள் ஒருவரேனும் இதனைக் கூறியிருப்பர் அல்லரோ? அங்ங்ணம் ஒருவரும் குறிப்பிடாமையை நோக்க முருகன் சிவனுக்கும் உமைக்கும் பிறந்தவன் என்ற கதை ஒன்றே சங்க காலத் தமிழகத்தில் வழக்குப் பெற்றிருந்தது என்பதே பொருந்துவதாகும். - அடுத்து நக்கீரர் முருகனை, மலைமகள் மகனே', கொற்றவை சிறுவ, பழையோள் குழவி என்று கூறியுள்ளமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/65&oldid=793380" இலிருந்து மீள்விக்கப்பட்டது