பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கால ஆராய்ச்சி (காதை 30, வரி 160). இவன் முதலர்ம் கஜபாகு என்று இலங்தை வரலாறு கூறும். இவன் ஆட்சிக் காலம் கி.பி. 114-136. இக்கயவாகு இலங்கையில் பத்தினி வணக்கத்தை ஏற்படுத்தினான் என்று இலங்கைக் கதைகளும் நாட்டுப்பாடல்களும் கூறுகின்றன. இன்றும் பத்தினி வணக்கம் இலங்கை மக்கள் சமயத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது. "கயவாகு வேந்தன் சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்றபோது யாழ்ப்பான வழியே சென்றனன்; போரின் பின் திரும்பும்போது போர் வீரரைச் சிறைப் பிடித்து வந்தான்; அவர்களுடன் பத்தினிக் கடவுளின் காற்சிலம்பும் வேறு சில அணிகளும் கொண்டு வந்தான் என்று இராசவழி என்னும் சிங்களக் காவியம் கூறுகிறது. கயவாகு வேந்தனே இலங்கையில் பத்தினி வணக்கத்தைத் தோற்றுவித்தவன் என்று கூறும் சிலப்பதிகாரச் செய்தி இதனால் உறுதி பெறல் காணத்தகும். இலங்கையில் உள்ள கண்ணகியம்மன் கோவில்களில் சிலம்பைத் தவிர வேறு உருவங்கள் வழிபாட்டிற்காக அமையவில்லை. "தமிழகத்தில் கண்ணகிக்குக் கோயில் எடுப்பித்த வைபவத்தில் பிரசன்னமாயிருந்து திரும்பியதும் முதன் முதலாக அங்கணாக் கடவில் கண்ணகிக்கு ஆலயமும் விழாவும் எடுப்பித்துத் தனது உருவச் சிலையை ஆலய முற்றத்தில் நிறுவினன்” என்று புராதன யாழ்ப்பாணம் என்னும் நூலில் முதலியார் சி. இராசநாயகம் அவர்கள் கூறிப் போந்தனர். "இங்குக் குறிப்பிட்ட கயவாகுவின் உருவச்சிலை யாழ்ப்பாணத்தில் சர் போல் ஈபீறிஸ் அவர்கள் நடத்திய புதை பொருள் ஆராய்ச்சியில் தலை வேறாகவும் உடல் வேறாகவும் உடைந்து காணப்பட்டமையின், யாழ்ப்பாணம் அரும்பொருட்சாலைக்கு அனுப்பப்பட்டது. கயவாகு மன்னன் நாடெங்கும் பத்தினிக்குக் கோயிலும் விழாவும் செய்தல் வேண்டுமெனக் கட்டளையிட்டதையிட்டு, யாழ்ப்பாணத்திலும் ஆலயங்கள் எழுந்தனவென்றும் வேலம்பரவையிலுள்ள கண்ணகிக் கோயில் அக்காலத்தில் முதலில் அமைக்கப்பட்டதென்றும் அதற்குப் பின்பு கட்டப்பட்டவைகளே களையோடை, அங்கணாக்கடவு முதலிய இடங்களில் உள்ளவை என்றும் யாழ்ப்பாண சரித்திரம் என்னும் நூலில் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை கூறியுள்ளார்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/73&oldid=793399" இலிருந்து மீள்விக்கப்பட்டது