பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சிலப்பதிகார காலம் சோழன் கரிகாலன் கோவலன் - கண்ணகி திருமணத்தின் இறுதியில் "இமயத்தில் புலிப்பொறி பொறித்த சோழன் தன் திகிரியை உருட்டுவோனாகுக', என்று சொல்லித் திருமணத்திற்கு வந்திருந்தோர் வாழ்த்தினர் என்னும் பகுதியில், அடியார்க்குநல்லார், அச்சோழனைக் கரிகாலன் என்று குறித்துள்ளார். கரிகாலனது வடநாட்டு வெற்றி, இந்திர விழவூர் எடுத்த காதையில் (வரி 87-104) விரிவாய்க் குறிக்கப்பட்டுள்ளது. அடுத்துக் கானல் வரியில், சோழன் கங்கை வரையில் சென்று மீண்டமை குறிப்பாய் உணர்த்தப்பட்டுள்ளது. "கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி - இங்ங்னம் கங்கை வரையில் சென்று மீண்ட சங்ககால சோழன் கரிகாலன் ஒருவனே ஆவான். இவை அனைத்தையும் நோக்க, கோவலன் - கண்ணகி திருமணம் நடைபெற்றபோது கரிகாலனே சோழப் பேரரசனாய் இருந்தான் என்பது தெளிவாகிறது. عمليو சோழ வேந்தன் ஒருவன் முதல் கயவாகு வேந்தனுக்கு முற்பட இருந்த வங்க நாஸிக திஸ்ஸன் (கி.பி. 111-114) காலத்தில் இலங்கைமீது படையெடுத்துப் பன்னிராயிரம் சிங்களவரைச் சிறை செய்து சோழ நாட்டுக்குக் கொண்டு சென்றான்; அவர்களைக் கொண்டு காவிரிக்குக் கரை இடுவித்தான் என்று இலங்கை வரலாறு கூறுதிறது. இங்ங்னம் செய்தவன் கரிகாலனே என்பது புறநானூற்றின் காலம்' என்னும் பகுதியில் முன்பே கூறப்பட்டதன்றோ? எனவே, சிலப்பதிகார வரலாற்றுத் தொடக்கத்தில் கரிகாலன் வாழ்ந்திருந்தான் என்று கொள்வது பொருத்தமாகும். - இலங்கைக் கயவாகு சேரன் செங்குட்டுவன் பத்தினிக்குக் கோவில் கட்டி வழிபட்டபோது வந்திருந்த அரசருள், "கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் ஒருவன் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/72&oldid=793397" இலிருந்து மீள்விக்கப்பட்டது