பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கால ஆராய்ச்சி அறியலாம். இங்ஙனமே காவிரி பற்றிய புராணக் கதையும் எனக் கோடலே ஏற்புடையது. - 9. நாம் வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் நகரத்துப் பழக்க வழக்கங்களுக்கும், சிற்றுார்ப் பழக்க வழக்கங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. நம்மிடையே புரோகித மணம் வழக்கிற்கு வந்து பல நூற்றாண்டுகள் ஆயினும், இன்றும் புரோகிதர் இன்றியே திருமணம் செய்யும் தமிழர் பலர் இத் தமிழ் நாட்டில் உண்டு. நகரத்தில் நடைபெறும் புரோகித மணமும், சிற்றுார்களில் நடைபெறும் புரோகிதன் அற்ற மணமும் இந்த நூற்றாண்டுப் புலவர் இருவரால் பாடப்படுகின்றன என்று கொள்வோம்; 21 ஆம் நூற்றாண்டில் இப்பாடல்களைக் காணும் அறிஞர் ஒருவர், இவ்விரண்டிற்கும் வேறுபாடு காணப்படலால் இவ்விரண்டும் வெவ்வேறு காலத்தன என்று கூறுதல் எங்ங்னம் பொருத்தமற்றதோ, அங்ங்னமே பிள்ளையவர்கள் முடிவும் பொருத்தமற்றதாகும். மேலும், கோவலன் திருமணச் செய்திகள் சமண முறைப்படி அமைந்தவை என்பது அறிஞர் சிலர் கருத்தாகும். 10. மேலே திருமணம் பற்றிக் கூறப்பெற்ற மறுப்பே இதற்கும் பொருத்தமாகும். 'பரத சாஸ்திரம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டிற்கு உட்பட்ட காலத்தில் இப்பொழுது காணப்படும் உருவை அடைந்திருக்கலாம் என்று அறிஞர் கூறுகின்றனர்." எனவே, கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செய்யப்பெற்ற சிலப்பதிகாரத்தில் பரத நாட்டியம் பற்றிய செய்திகள் இருத்தலில் வியப்பில்லை அன்றோ? 11. சிலப்பதிகாரம் பொதுமக்கள் காப்பியம் - நாடகக் காப்பியம். ஆதலால் அதன்கண் ஆற்றுவரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, ஊசல் வரி, அம்மானை முதலிய பலவகைப் பாடல்கள், பொது மக்கள் சொற்கள் என்பன இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம்-செய்யுளியலையும் அதன் உரைகளையும் காண்போர் இப்பாடல்கள் செய்யுளியற் செய்திகட்கு உட்பட்டவையே என்பதை எளிதில் உணர்தல் கூடும். 12. பார்ப்பணி கீரிப்பிள்ளையைக் கொன்றது பஞ்ச தந்திரக் கரையில் சொல்லப்பட்டுள்ளது என்பது ஒரு வாதம். பஞ்சதந்திர நூலைப் பற்றிய உண்மை வரலாறு கிடைக்கவில்லை. அதன் உருவம் காலப்போக்கில் மாறுதல் அடைந்ததா இல்லையா என்பதும் விளங்கவில்லை. அது பாரசீக அரசன் கொச்ரெள அனேர்வர்ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/81&oldid=793416" இலிருந்து மீள்விக்கப்பட்டது