பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- லம் சிலப்பதிகார காலம் 75 (கி.பி. 531-579) என்பவனால் பஹ்லவி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிற நாட்டினரின் மதிப்பைப் பெறும் பெருமையை இந்நூல் அடைவதற்கு இந்நிலையில் நூறு ஆண்டுகளாவது சென்றிருக்க வேண்டுமாதலின் இது கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். உப கதைகள் பல பெளத்த மத நூல்களில் காணப்படுகின்றன. புத்தரின் ஜாதகக் கதைகளைக் கூறும் நூல்களில் உள்ள உப கதைகளைத் தழுவி எழுந்த கதை நூல்களில் பஞ்சதந்திரம் சிறப்பானது பிள்ளையவர்கள் கூறும் பஞ்சதந்திரக் கதைகளே புத்த சாதகக் கதைகள் முதலிய நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை. எனவே, ஒவ்வொரு கதையின் காலம் இன்னது என்று எவராலும் கூறுதல் இயலாது. கீரிப்பிள்ளையின் கதை பஞ்சதந்திர நூல் உண்டாவதற்கு முன்னரே நாட்டில் வழங்கப்பட்ட கதையாய் இருக்கலாம். அது கோவலனோடு தொடர்புண்ட கதையாயிருந்து வட நாட்டுக் கதைகளில் உருமாறியும் இருக்கலாம். மிகத் தெளிவாகத் தெரியும் கயவாகு வேந்தன் காலத்தைக் காற்றில் பறக்கவிட்டுக் காலமே ஐயத்திற்கு இடமாகக் கூறத்தகும் பரிதாப நிலையிலுள்ள சான்றுகளைக் காட்டிச் சிலப்பதிகாரம் பிற்பட்டது எனக் கூறுதல் சிறிதும் பொருந்தாததாகும். குறிப்புகள் 1. History of Ceylon, vol I, Part I, pp. 175 – 182. 2. History of Ceylon, Vol I, pp. 183 – 185, சிலப்பதிகார நிகழ்ச்சிகள், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின ஆகலாம்; ஆயின், அந்நூல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு செய்யப்பட்டதென்று கூற இயலாது என்று வரலாற்றாசிரியர் திரு. K. A. நீலகண்ட சாஸ்திரியர் கூறியுள்ளார்; ஆயின் அதற்குரிய காரணங்களைக் காட்டவில்லை. — A History of S. India, p. 112. 3. தினகரன், 13.7.62 திரு. ம.பொ. செல்வரத்தினம் எழுதிய கட்டுரை, இலங்கையில் கண்ணகி வழிபாடு பற்றிய விவரங்களை எனக்கு உதவியவர் வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் அவர்கள். அவருக்கு எனது உளமார் நன்றி உரியது. 4. R. Sathyanatha Ayyar, History of India, Vol.1, pp. 206 – 207. 5. S. Vaiyapuri Pillai, History of Tamil Language and Literature, pp. 143-152. 6. According to Silappatikaram, King Gajabahu on his return to Ceylon raised temples and altars to make daily offerings to PATTINI-DEVI and instituted the conduct of grand and gorgeous Processions along the streets of his capital city Anuradhapura in the month of Adi (July–August). The annual Perahera now conducted at Kandy is obviously a continuance of the festival procession instituted by king Gajabahu in honour of Pattini-Devi. It would be interesting to

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/82&oldid=793421" இலிருந்து மீள்விக்கப்பட்டது