பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகையின் காலம் 83 கள் விகுதி சேர்த்துக் கூறப்படுதல், செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றுப் பலர்பாலில் வரல் போன்றவை கலித்தொகைச் செய்யுட்களில் காணப்படுகின்றன. மேலும், 'நின்றித்தை, போசித்தை (மருதக்கலி 29) எனவும், பாடித்தை, இஃதொத்தன் (குறிஞ்சிக்கலி 22, 24, 25), எனவும் சில சொற்கள் மாறுபட்டுச் செய்யுட்களில் இடம் பெற்றுள்ளன. இவை இத்திணைகளைப் பற்றியே பாடப் பட்ட சங்க காலப் புலவர் பழம்பாடல்களில் பயின்றில என்பதை நோக்க, இச் செய்யுட்கள் பிற்காலத்தன எனல் கூறாதே விளங்கும். 5. குறிஞ்சிக் கலியுள் ஐந்திணை பற்றிக் கூறற்குரிய அரிய செய்திகளை, ஏனைச் சான்றோரைப் பின்பற்றிக் கூறுதலை ஒழித்து, அவரால் கனவிலும் கருதப்படாதவையும் சொல்லப்படாதவையுமான கைக்கிளை பெருந்திணைத் செய்திகளையும், இழிந்தோர் களவினையும் மருதக் கலியுள் கூனும் குறளும் உறழ்ந்து கூறலும் புணர்தலும் (29) போன்ற செய்திகளையும், "தேள் கொட்டி ஏறும் விஷம் போலக் காமம் தலைக்கேறுகிறதோ?" என்றாற் போலக் கூறப்படும் முல்லைக்கலிச் செய்திகளையும், இவை போன்ற ஏனைய கலிகளிலும் வெறுக்கத் தக்க - பண்டைப் புலவர் நெறிக்கு மாறாகக் கூறப்படும் செய்திகளையும் அச் சங்க காலப் புலவரோடு இருந்த சான்றோர் பாடியிரார் என்பது அறிவும் நடுவுநிலைமையும் உடையார் நன்கறிதல் கூடுமன்றே? இவற்றுக்கு இலக்கணம் தொல்காப்பியத்துள் காணப்படினும், இவற்றைப் பிற்காலத்துப் புலவர் பாடினர் எனக் கோடலே அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமாகத் தெரிகிறது. அறிஞர் மேலும் ஆய்வாராக! 6. காமன் ஆரியக் கடவுள். அவன் 'காமனார் எனவும், ‘சாமனார்க்கு மூத்த காமனார் எனவும் மருதக் கலியுள் (செ. 29) கூறப்பட்டாற் போலப் பிற தொகை நூல்களுட் கூறப்பட்டிலன். 7. கலித்தொகை முழுமையிலும் எந்த அரசன் பெயரும் சுட்டப்படவில்லை. மூவேந்தருள் பாண்டியனே சுட்டப்படுகின்றான்; வையை, கூடல் இவையே சுட்டப்படுகின்றன. ஏனைய தொகை நூல்களிற் கூறப்படும் வள்ளல்களோ புலவர்களோ சுட்டப் படவில்லை. மேற்கோள் காட்டத்தகும் இடங்களில் வாரணவாசிப் பதம் போன்ற வடநாட்டுச் செய்திகளும், உவமைகள் கூறப்பட்டுள்ள இடங்கள் பலவற்றில் புராண கதைகளும் தெய்வங்களுமே குறிக்கப்பட்டுள்ளன. ஏனைய அகப் பாட்டுக்களில் பெரும்பாலான செய்யுட்களில் வந்துள்ள தமிழ்ப்புவவர் பெயர்கள், வள்ளல்களின் பெயர்கள், அரசர்கள் பெயர்கள், போர்கள் முதலியவை போன்ற தமிழகச் செய்திகளுள் ஒன்றேனும் 149 செய்யுட்களைக் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/90&oldid=793439" இலிருந்து மீள்விக்கப்பட்டது