பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கால ஆராய்ச்சி கலித்தொகையில் பயின்று வராமை கொண்டே கலித்தொகைச் செய்யுட்கள் பிற அகப்பொருள் நூல்கட்குப் பின்னரே செய்யப்பட்டவை எனக் கூறலாம். ஏறத்தாழக் கி.பி. 300 இல் பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றிக்கொண்டனர் என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ அதே காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் களப்பிரரால் தடுமாற்றம் கொண்டன. அதுமுதல் ஏறத்தாழக் கி.பி.575 வரையில் தமிழகத்தில் அமைதியான அரசு இல்லை. ஏறத்தாழக் கி.பி.575இல் காஞ்சியில் பல்லவர் நிலைத்து ஆளத் தொடங்கினர். அதே காலத்தில் கடுங்கோன் என்ற பாண்டியன் பாண்டிய நாட்டில் நிலைத்து ஆளத் தொடங்கினான். இவை யாவும் முன்னரே கூறப்பட்டவை. - கலித்தொகையில் பாண்டியன், அவன் தலைநகரான மதுரை, வையை ஆறு, பொதியில் மலை, அவனது நேர்மையான ஆட்சி என்பன இடம் பெற்றுள்ளன. இவற்றுடன் பாண்டியர் வளர்த்த தமிழ்ச் சங்கம் பற்றிய குறிப்புக்களும் காணப்படுகின்றன. முன் குறிப்பிட்டது போல் சேர, சோழர் பற்றியோ புகழ் பெற்ற குறுநில மன்னரைப் பற்றியோ ஒரு சிறு குறிப்பும் இந்நூலில் இடம் பெறவில்லை. இவை அனைத்தையும் நடுவு நிலையிலிருந்து நோக்க, இக் கலித்தொகை என்னும் நூல், சங்க காலத்தின் இறுதியில் களப்பிரர் படையெடுப்புக்குச் சிறிது முற்பட்ட காலத்தில் பாண்டியன் மீதும் அவனது நாட்டின் மீதும் அளவற்ற பற்றுக் கொண்ட பாண்டிய நாட்டுப் புலவர் ஒருவரால் பாடப்பட்டிருத்தல் வேண்டும் என்று கொள்வது மிகவும் பொருத்த மாகும். இப்புலவர், நச்சினார்க்கினியர் தம் உரையில் குறிப்பிட்ட ஆசிரியர் நல்லந்துவனார் ஆயின், இந்நல்லந்துவனார் பிற நூல்களிலுள்ள பாடல்களைப் பாடிய நல்லந்துவனாரினும் வேறுபட்டவர் எனக் கொள்ளலே பொருத்தமுடையது. எனவே, கலித்தொகையின் காலம் ஏறத்தாழக் கி.பி. 300 என்னலாம். குறிப்புகள் l, K.N. Sivaraja Pillai, The Chronology of the Early Tamils, p. 35. 2. K.N. Sivaraja Pillai, The Chronology of the Early Tamils, P. 225. 3. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை, தமிழ் மொழி இலக்கிய வரலாறு, பக்.27, 52, 57, - - ஐவர் பாடியவராயின், அவர்தம் பெயர்கள் ஏடுகளில் இடம் பெற்றிருக்கும்; பாடியவர் பலராயினும், பிற நூற் பாடல்களில் உள்ளவாறு புலவர் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கும். - 4. இங்ங்ணம் கொள்வதே மிக்க பொருத்தமாகும். இங்ங்னம் கொள்ளின், கலித் தொகை என்னும் பெயர் தவறாகும்; தொகை நூல்கள் ஏழாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/91&oldid=793442" இலிருந்து மீள்விக்கப்பட்டது