பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பரிபாடலின் காலம் முன்னுரை பரிபாடல் என்னும் இசைப் பாக்களால் தொகுக்கப் பெற்றமையால் இப்பாக்களின் தொகுதி பரிபாடல் எனப் பெயர் பெற்றது. இப்பாக்களுக்குப் பண்கள் வகுக்கப் பெற்றுள்ளதைக் கான, இவை சங்க காலத்தில் இசையுடன் பாடப்பட்டன என்பது தெளிவு. 'இது, தொகைநிலை வகையால் பா என்று சொல்லப்படும் இலக்கணம் இன்றி, எல்லாப் பாவிற்கும் பொதுவாக நிற்றற்கு உரிதாய், இன்பப் பொருளைப் பற்றிக் கூறும். இது சிறுமை இருபத்தைந்து அடியும், பெருமை நானூறு அடியும் எல்லையாகக் கொண்டுவரும்', என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். பரிபாடற்கண் மலையும், யாறும், ஊரும் வருணிக்கப்படும் என்று இளம்பூரணர் கூறியுள்ளார்." அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்கள் நான்கனுள் இன்பைத்தையே பொருளாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனல் விளையாட்டு முதலியவற்றில் இப்பாடல் வருமென்று பேராசிரியர் கூறியுள்ளார். தெய்வ வாழ்த்து உட்படக் காமப் பொருள் ಅಣ್ಣಿಸಿಕ உலகியலே பற்றி வரும் என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். பரிபாடல் நூல் இன்றுள்ள பரிபாடல்களிற் பல திருமாலையும் முருகனையும் பற்றியவை: பத்தி நெறிபற்றியவை; தொல்காப்பியர் விதிக்கு மாறுபட்டவை. வையை பற்றிய பாடல்களும் முருகன் பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/92&oldid=793443" இலிருந்து மீள்விக்கப்பட்டது