பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலின் காலம் 87 நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பெற்றன என்று கருத இடந்தருகின்றன. ஆசிரியர் நல்லந்துவனார், இளம்பெருவழுதியார், கடுவன் இள எயினனார், கரும்பிள்ளைப்பூதனார், கீரந்தையார், குன்றம்பூதனார், நல்லழுசியார், நல்லெழுனியார் நல்வழுதியார், மையோடக்கோவனார் என்னும் பதின் மூன்று பேர் இந்நூற் பாடல்களைப் பாடியுள்ளனர். ஒவ்வொரு பாடலுக்கும் இசை வகுத்த புலவர் வேறாவர். இந் நூற் பாடல்களுக்குப் பரிமேலழகர் இயற்றிய உரை கிடைத்துள்ளது. இவ்வுரை பல இடங்களில் பொழிப்புரையாயும், சில இடங்களில் பதவுரையாயும், வேறு சில இடங்களில் கருத்துரையாயும் அமைந்துள்ளது; இலக்கணக் குறிப்புக்களை ஆங்காங்குப் பெற்றுள்ளது. விளங்காத பகுதிகள் சில தமிழ் நூல் மேற்கோள்களாலும் வடநூல் கருத்துக்களாலும் விளக்கப்பட்டுள்ளன. டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் இந்நூலைச் சிறந்த முறையில் பதிப்பித்தனர். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் புதிய உரையுடன் கூடிய பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். பரிபாடலின் காலம் பரிபாடல் சங்க காலத்திற்குப் பிற்பட்டது என்று கூறும் அறிஞர் வையாபுரிப் பிள்ளையவர்கள் அதற்குரிய காரணங்களைக் கீழ்வருமாறு மொழிகின்றனர்: 1. பரிபாடல்களைப் பாடிய புலவருள் ஒருவரேனும் பிற தொகை நூற் பாடல்களைப் பாடியவராகத் தெரிந்திலர். சில பரிபாடல்களைப் பாடிய ஆசிரியன் நல்லந்துவனார், அந்துவனார், மதுரை ஆசிரியன் நல்ல துவனார் என்னும் புலவர்களின் வேறானவர். இங்ங்னமே பதினைந்தாம் பரிபாடலைப் பாடிய இளம்பெருவழுதியார் புறநானூற்றில் 182ஆம் செய்யுளைப் பாடிய கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதியின் வேறானவர். ஏனெனில், பின்னவர் தமது புறப்பாட்டில் இந்திரர் என்று பன்மையில் சுட்டலால் சமணர் எனக் கருதற்பாலர் ஆதலின் என்க. 2. பிற தொகை நூல்களில் காணப்படும் வட சொற்களையும், புராண இதிகாசக் கதைகளையும் விடப் பரிபாடல்களில் இவ்விரு வகையும் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. கவிதை, ஆராதனை (பாடல் 6), மேகலை, வாகுவலயம் (பாடல் 7), புங்கவம், நாதர், குடாரி, அருச்சிப்போர், அமிர்தபானம் (பாடல் 8), மிதுனம், புன்னாகம், சண்பகம், குந்தம், மல்லிகா மாலை (பாடல் 11), யாத்திரை, பிரமம், இரதி, சோபனம் (பாடல் 19), வந்திக்க, சிந்திக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/94&oldid=793447" இலிருந்து மீள்விக்கப்பட்டது