பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கால ஆராய்ச்சி (பாடல் 20 முதலிய வட சொற்கள் பரிபாடல்களின் பிற்காலத்தை உணர்த்துகின்றன. 3. சங்க காலத்திற்குப் பின்பே திருவேங்கடம், திருவரங்கம், திருமாலிருஞ்சோலைமலை, திருவனந்தபுரம் என்பன வைணவத் தளிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. பின் வந்த ஆழ்வார்கள் இத்தளிகளைப் பாடியுள்ளனர். சிலப்பதிகாலத்திலும் இவை குறிக்கப்பட்டுள்ளன. திருமாலிருஞ்சோலைமலை பரிபாடலில் குறிக்கப்படலால் பரிபாடலின் காலம் கி.பி. 600 என்னலாம்.' 4. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர் திருப்பரங்குன்றத்துச் சிவபெருமானைப் பாடியுள்ளார்; ஆயின், முருகனைப் பற்றிப் பாடவில்லை. எனவே, சம்பந்தருக்குப் பின்பே முருகன் கோவில் உண்டாயிற்று என்று கூறலாம். பரிபாடலில் அம்முருகனைப் பற்றிய பாடல்கள் இருத்தலால் அப்பாடல்களின் காலம் ஏறத்தாழக் கி.பி. 700 என்னலாம். 5. கி.பி. 300க்கு முற்பட்ட தமிழிலக்கியத்தில் அகத்தியரைப் பற்றிய பேச்சே இல்லை. ஆனால் பரிபாடலில் அகத்தியர் பொதியில் முனிவன் (பாடல் 11, வரி 11) என்று குறிக்கப்பட்டுள்ளார். 6. கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட அபிஷேக பாண்டியன் காலத்தில் மதுரை நான்மாடக் கூடலென்று பெயர் பெற்றது. எனவே, கூடலைப் புகழும் பரிபாடல் கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம். 7. பதினோராம் பரிபாடலில் காணப்படும் வானிலை பற்றிய குறிப்புக்களை ஆராய்ந்து திரு. சுவாமிக்கண்ணு பிள்ளையவர்கள் அப்பாடலின் காலம் கி.பி. 634 என்று கூறியுள்ளார்." 8. நான் (பாடல் 20, வரி 82), ஆயும் (பாடல் 6, வரி 71) என்னும் பிற்காலச் சொல்லுருவங்கள் பரிபாடல்களில் பயின்றுள்ளன." இனி இவற்றை ஒவ்வொன்றாக இங்கு ஆராய்வோம். 1. பரிபாடல்களுக்கு இசை வகுத்த புலவர்களுள் கண்ணகனார் ஒருவர். புறநானூற்றில் 218ஆம் செய்யுளையும் நற்றிணையில் 79ஆம் செய்யுளையும் கண்ணகனார் என்ற புலவர் பாடியுள்ளார். இவ்விருவரும் ஒருவரே என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் கருதுகிறார்கள்." இக்கருத்தை மறுப்பதற்கு எவ்விதச் சான்றும் இல்லை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/95&oldid=793448" இலிருந்து மீள்விக்கப்பட்டது