பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலின் காலம் 89 நன்னாகனார் என்ற புலவர், புறநானூற்றில் 381ஆம் செய்யுளைப் பாடியுள்ளார். கீரந்தையாரது பரிபாடலுக்கு இசை வகுத்த நன்னாகனார் என்ற புலவரும் முன் கூறப்பெற்ற நன்னாகனாரும் ஒருவரே என்று கருதுவதில் தவறில்லை. இசைப் புலவர்கள் இயற்றமிழ்ப் புலவராயும் இருத்தல் இயல்பாகும். இங்ங்னமே இயற்றமிழ்ப் புலவர் இசைத் தமிழிலும் வல்லராதலைச் சிலப்பதிகாரம் கொண்டு அறியலாம். எனவே, மேலே காட்டப்பெற்ற இசைப் புலவர் இருவரும் சங்க காலப் புலவர் அல்லர் என்று உறுதியாகக் கூற இயலாமை காண்க. 2. பிற தொகை நூல்களிலும் உருத்திரன், உலோச்சனார். பவுத்திரன், பிரமதத்தன், காசிபன் கீரனார், சத்திநாதனார், பிரமசாரி, கெளசிகனார், தாமோதரனார், மார்க்கண்டேயனார், வான்மீகியார் போன்ற வட மொழிப் பெயர்கள் புலவர் பெயர்களாக வந்துள்ளன. பிற தொகை நூல்களில் முருகன் சூரபதுமனைக் கொன்றமை, சிவன் முப்புரம் எரித்தமை, திருமால் பிரமனைப் படைத்தமை போன்ற புராண இதிகாசக் கதைகள் ஆங்காங்கு இடம் பெற்றுற்றன. கண்ணபிரான் நப்பின்னையை மணந்தமை, கண்ணன் குருந்து ஒசித்தது போன்ற பாகவத நிகழ்ச்சிகள் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையுள் கூறப்பட்டுள. கண்ணனும் பலதேவனும் நப்பின்னையை நடுவிற் கொண்டு ஆடிய அற்புதக் குரவை ஆயர்பாடியில் ஆடப்பட்டது என்றும் ஆய்ச்சியர் குரவை அறிவிக்கிறது. கண்ணன் நீராடிக் கொண்டிருந்த ஆயர் மகளிர் ஆடைகளைக் கவர்ந்தமையும், அப்பொழுது பலராமன் வருதலை அறிந்து, ஆயர் மகளிரது மானங் காக்க வேண்டிக் கண்ணன் குருந்து ஒசித்துத் தன் செயலைத் தமையன் அறியாமற் செய்தமையும் அகநானூற்றில் (செ. 59) மருதன் இளநாகனார், • • • • • • • • • • • • • • r * * * * * * * * • • • • • • வடா அது வண்புனல் தொழுநை வார்மணல் அகன்றுறை அண்டர் மகளிர் தண்டழை உடீஇயர் மரஞ்செல மிதித்த மாஅல் என்று குறித்துள்ளார். இனிக் கண்ணன் ஆடிய குடக்கூத்தும், அவன் மகனான பிரத்தியும்நன் ஆடிய பேடு என்னும் கூத்தும், கண்ணன் மல்லன் வேடம் பூண்டு வானனைக் கொன்றாடிய மல்லாடல் கூத்தும், அல்லியத் தொகுதி என்று கூத்தும் சிலப்பதிகாரம் - அரங்கேற்று காதையில் இடம் பெற்றுள சிலப்பதிகார காலத்திற்கு முன்னரே இக்கதைகள் தமிழகத்தில் வழக்குப் பெற்றுவிட்டன என்பதையே இவை உணர்த்துகின்றன. இவைபோன்ற சிலவே பரிபாடலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/96&oldid=793449" இலிருந்து மீள்விக்கப்பட்டது