பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் பாணம் தொடுப்பானோ? கவிஞர் பாடிய வகையினைக் கேட்டனள் கலைச்சியின் தாயார். அவள் அதனால் வருத்தமும் அடைத்தாள். தன் மகளைக் கடிந்ததுடன், அவளை மன்னித்தருளவும் கவிஞரை வேண்டிக் கொண்டாள். கவிஞரும் அப்போது கலைச்சியின் சிறப்பை வியந்து இப்படிப் பாடுகிறார். நஞ்சுகுடி கொண்டகணை நாலுந் தெரிந்துமதன் இஞ்சிகுடி தன்னிலும்வந் தெய்வானோ-விஞ்சு முலைச்சிகரத் தாலழுத்தி முத்தமிட்டுச் சற்றே கலைச்சிகரத் தாலணைந்தக் கால். (184) "விஞ்சுமுலைச் சிகரத்தால் அழுத்தி முத்தமிட்டு - பருத்துப் புடைத்த தன் தனக்காம்புகளினாலே அழுத்தி முத்தமிட்டு, கலைச்சி கரத்தால் சற்றே அணைந்தக்கால் - கலைச்சி என்பவள் தன் கரங்களாலே சற்று நேரம் அணைத்த விடத்து, மதன் - மன்மதனானவன், நஞ்சு எடுத்துகுடி கொண்ட கணை நாலுந் தெரிந்து இஞ்சுகுடி தன்னிலும் வந்து எய்வானோ?” நஞ்சினை நிலையாகக் கொண்டிருக்கும் மலரம்புகள் நான்கினையும் ஆராய்ந்தெடுத்து இஞ்சிகுடி என்கின்ற இவ்வூரிலும் வந்து என்மீது எய்வானோ?” அங்ங்னம் எய்யவேண்டிய வேலை அவனுக்கு இல்லை என்பது கருத்து. \ ~ தாமரை முல்லை மா அசோகம் நீலம் என்னும் ஐந்து மலர்க் கணைகளுள் நெஞ்சில் அரவிந்தமும், நீள்குதம் கொங்கையினும், துஞ்சும் விழியில் அசோகமும், சென்னியிலே முல்லையும், அல்குலிலே நீலமுமாக எய்வது மாரனின் மரபு. 'நாலும்’ என்றதனால், ஐந்தாவதான நீலத்தை எய்தலை நாடி, அவளைக் கூடுதலையும் விரும்பினார் கவிஞர் என்க. சத விகரம் பெண்ணைப் பற்றிய ஒரு சண்டையிலே, சகோதரர் சிலர் மாண்டுவிட, அவர்களின் அறியாமைக்கு இரங்கிக் கவிஞர் கூறிய செய்யுள் இது. வாலி மடிந்ததுவும் வல்லரக்கர் பட்டதுவும் கோலமுடி மன்னர் குறைந்ததுவும்-சால மதியுடைய நூற்றொருவர் மாண்டதுவு மையோ சதவிகரத் தால்வந்த தாழ்வு. (185) 'வாலி' என்பவன் முன்னாளிலே மடிந்ததுவும், வல்லமையுள்ள அரக்கர்கள் அந் நாளிலே இறந்ததுவும், அழகிய முடி மன்னர்கள் பலர் போரிலே வெட்டுண்டதுவும், மிகுந்த அறிவினையுடையவரான துரியோதனாதியர் மாண்டதுவும்